Cinema News
நெருப்புடா!.. நெருங்குடா பார்ப்போம் மோடுக்கு மாறிய சூர்யா!.. கங்குவா படத்தின் ஃபயர் அப்டேட்!..
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி ரஜினிகாந்தின் வேட்டையின் படத்துடன் நேரடி கிளாஷ் விட தயாராகிவிட்டது.
கங்குவா படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாக்கி வரும் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதையும் படிங்க: இளையராஜாவோட பயோபிக் எப்படி இருக்கணும்னு தெரியுமா? பிரபலம் சொல்றதைக் கேளுங்க…
இந்நிலையில் தற்போது கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிப்பின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாள் வரும் ஜூலை 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கங்குவா படத்தின் முதல் பாடல் பிறந்தநாள் பரிசாக வெளியாக காத்திருக்கிறது.
கங்கு என்றாலே நெருப்பு என்பதுதான் பொருள். நெருப்பு போல வரப் போகிறார் சூர்யா என்பதற்காகத்தான் சிறுத்தை சிவா படத்தின் டைட்டிலையே கங்குவா என வைத்துள்ளார். இந்நிலையில், முதல் பாடலில் நெருப்பு இல்லாமல் இருந்தால் நல்லா இருக்குமா? அதற்காகவே ஃபயர் சாங் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: கொஞ்சம் லேட் பிக்கப்தான்.. இந்தியன் 2 ரிசல்ட்டுக்கு பிறகு கமல் எடுத்த அதிரடி முடிவு
கங்குவா படத்துடன் வேட்டையன் மோதவுள்ள நிலையில், லைகாவுக்கு மீண்டும் ஒரு அடி கன்ஃபார்ம் என சூர்யா ரசிகர்கள் கூறுகின்றனர். தீபாவளிக்கு அமரன் வெளியாகவுள்ள நிலையில், வேட்டையன் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
கங்குவா படத்தை முடித்து விட்டு சூர்யா 44 படத்தின் ஷூட்டிங்கையே சூர்யா பரபரப்பாக நடத்தி வருகிறார் என்றும் அடுத்த பொங்கலுக்கு அல்லது சம்மருக்கு சூர்யா 44 வந்து விடும் என்கின்றனர்.
இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ க்கு விகடன் கொடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா? கொடுத்த அட்வைஸையும் பாருங்க