பாடல் கேட்டு நொந்து போன பாலசந்தர்… அரை தூக்கத்தில் கண்ணதாசன்… அப்புறம் என்னாச்சுன்னு பாருங்க…

Published on: July 20, 2024
KDNKB
---Advertisement---

கவியரசர் கண்ணதாசன் என்றாலே பாடல்கள் எல்லாம் பிரமாதமாக இருக்கும். அவை காலத்தால் அழியாத காவியங்களாக இருக்கும் என்பது நாமறிந்த விஷயம்.

எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் இவர் எழுதிக் கொடுத்த பாடல்கள் என்றென்றும் இனியவை. பாடல் தாமதமாக பாலசந்தர் கோபத்தின் உச்சிக்குச் செல்ல எம்எஸ்வி. கையைப் பிசைய அடுத்து நடந்தது என்னன்னு பார்ப்போமா…

படத்தின் பெயர் அபூர்வ ராகங்கள். படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான ரிகர்சலுக்குப் போலாமான்னு பாலசந்தர் கேட்கிறார். எம்எஸ்வி. கையைப் பிசைந்தபடி, நாளைக்கு வைத்துக் கொள்ளலாமா எனக் கேட்கிறார். காரணத்தை கேட்க பாடல் வரிகள் இன்னும் வரவில்லை என்பது தெரிகிறது.

‘பெரிய கவிஞர் தான். அதுக்காக எத்தனை நாள் காத்திருக்கறது’ன்னு கோபத்தில் கத்திய பாலசந்தரை எம்எஸ்.வி. சமாதானம் செய்கிறார். கமல், அனந்து இருவரும் கண்ணதாசன் உறங்கிக் கொண்டு இருக்கிறார் என்கிறார்கள். அப்படின்னா சூட்டிங்கைக் கேன்சல் செஞ்pட்டு நானும் தூங்கட்டுமா என கோபம் கொப்பளித்தார் பாலசந்தர்.

Apoorva ragangal
Apoorva ragangal

அவர் சொன்னதை அனைத்தும் அரைத்தூக்கத்தில் இருந்த கவிஞரும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாலசந்தர் சொல்கிறார். ‘இப்பவாவது எழுந்துட்டாரான்னு பாருங்கய்யா… எதையாவது எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கய்யா… வந்தா நான் எழுத மாட்டேனா’ என கத்துகிறார்.

அதன்பிறகு அங்கு போய் பார்த்தால் கவிஞரைக் காணவில்லை. அவரது உதவியாளரிடம் பாடல் இருக்கிறது. படித்தால் ஆனந்த ஆச்சரியம். அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. இப்படி ஒரு பாடலா என படித்தவர்கள் வியக்கிறார்கள். எதை எடுப்பது? எதை விடுப்பது என தெரியாமல் குழம்பி விட்டார்களாம். அவர் 7 வகையான பாடல்களை எழுதியுள்ளார்.

அவற்றில் ஒன்று தான் ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்’ என்ற பாடல். இந்தப் பாடலைப் பாடிய வாணி ஜெயராமுக்குக் கிடைத்ததோ தேசிய விருது.