Connect with us
nithya

Cinema News

கமல் மிகவும் மோசமானவர்.. என்ன பேச வைக்காதீங்க!.. பகீர் கிளப்பும் பிக்பாஸ் பிரபலம்!..

திறமையான நடிகர், உலக நாயகன், சிறந்த நடிகர் என பல புகழ்களை கமல் பெற்றிருந்தாலும் கமலை சுற்றி எப்போதும் சில சர்ச்சைகளும் இருக்கிறது. அவரை பிடிக்காத பலரும் அவரின் சொந்த வாழ்க்கையை கையில் எடுத்து அவரை அசிங்கமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவரை ஏதோ பெண் பித்தன் போல சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பலரும் சித்திரிக்கிறார்கள். குறிப்பாக கமலை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் ரஜினி ரசிகர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இது எதற்கும் கமல்ஹாசன் எதிர்வினை ஆற்றுவதில்லை. பல வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறார்.

இதையும் படிங்க: மருதநாயகம் படத்துல கமல் காளையை ஓட்டுனதுல இவ்ளோ விஷயம் இருக்கா…? உண்மையைச் சொன்ன பிரபலம்

இதுபோன்ற பல விமர்சனங்களை கடந்து வந்திருக்கிறார். சொந்த வாழ்வில் வாணி கணபதி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. அதன்பின் நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்குதான் 2 பெண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஸ்ருதி, அக்‌ஷரா என இருவருமே சினிமாவில் இருக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு சரிகாவையும் பிரிந்தார் கமல்ஹாசன். அதன்பின் நடிகை கவுதமியுடன் ஒரே வீட்டில் லிவ்விங் டூ கெதரில் சில வருடங்கள் இருந்தார். அதன்பின் கவுதமியும் கமலை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். விக்ரம் ஹிட்டுக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிப்பதில் பிஸியாகிவிட்டார் கமல்.

nithya

இந்நிலையில்தான், நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கமலை பற்றி கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என அறிவுரை சொன்னார் கமல். மேலும், பாலாஜி மற்றும் அவரின் மனைவி நித்யா ஆகியோரை வீட்டிற்கு நேரில் வரவழைத்து இருவருக்கும் அறிவுரைகள் சொன்னார்.

இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி சேனல் நித்யாவிடம் பேசியபோது ‘கமலை பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். அப்புறம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். அவரை போல மோசமானவரை நான் பார்த்ததே இல்லை’ என் சொல்லி பற்ற வைத்திருக்கிறார். அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top