அகரம் ஃபவுண்டேஷன் விருது விழாவில் கலந்துக் கொண்டு சூர்யா பேசும் போது, தான் எதற்குமே உதாவமல் இருந்தேன் என பேசியிருந்தார். அதற்கு முன் பேசிய கார்த்தியின் எதிர்வினை தான் சூர்யா அப்படி பேசக் காரணம் என்கின்றனர்.

அகரம் அறக்கட்டளை மற்றும் சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 45-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு நேற்று இரவு நடைபெற்ற விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா சினிமாவுக்கு தான் எப்படி வந்தேன் என்பது குறித்தும் தனக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்தும் பேசினார்.

நடிகர் சூர்யாவின் 49-வது பிறந்தநாள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னா நடிகர் கார்த்தி ஜீரோவில் இருந்து ஹீரோவானவர் எங்க அண்ணன் சூர்யா என்றார்.

அதே போல, நேற்று நடைபெற்ற விழாவிலும் சினிமா ஆசையை சூர்யாவுக்கு கிடையாது என்றும் தனக்கு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என இன்ஜினியரிங் படித்தாலும் அதை எல்லாம் விட்டுவிட்டு நடிக்க வந்தேன் என்றார்.

சூர்யா ஹீரோவாக மாறி நந்தா, பிதாமகன், காக்க காக்க படங்களிலேயே மிகப் பெரிய நடிகராக மாறிவிட்டார். கங்குவா படம் உலகளவில் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது. ஆனால், இன்னமும் சூர்யாவை மட்டம் தட்டும் விதமாகவே கார்த்தி பேசி வருகிறாரே ஏன் என்கிற கேள்வியே அவரது ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

ஜீரோவிலிருந்து ஹீரோவானார் சூர்யா, நடிக்கவே பிடிக்காது என்றெல்லாம் கார்த்தி மீண்டும் மீண்டும் பழைய பஞ்சாங்கத்தையே பாடி வருவதற்கு பின்னால் ஏதாவது உள்குத்து இருக்கிறதா என்கிற கேள்விகளையும் எழுப்பி விடுகின்றனர்.

சூர்யா கங்குவா, சூர்யா 44 என அடுத்தடுத்து பெரிய ஹிட் படங்களை கொடுக்க சூர்யா காத்திருக்கிறார். கார்த்தி நடிப்பில் மெய்யழகன், வா வாத்தியார், சர்தார் 2 படங்கள் உருவாகி வருகின்றன.

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், எல்லா தம்பிகளும் அண்ணன்களை கிடைக்கிற கேப்பில் எல்லாம் போட்டுத்தாக்கிவிடுவார்கள் போலத் தெரிகிறது எனக் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *