Cinema News
பிக்பாஸ் சீசன் 8-ல் மக்கள் செல்வன்!.. கமல் அளவுக்கு ஸ்கோர் செய்வாரா விஜய் சேதுபதி?!..
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த 7 சீசன்களையும் கமல்ஹாசனே நடத்தினார். அமெரிக்காவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி ஹிந்திக்கு போய் அதன்பின் தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் உருவாக துவங்கியது.
7 சீசன்களையும் கமல்ஹாசன் சிறப்பாகவே நடத்தினார். இதற்காக அவருக்கு பல கோடிகள் சம்பளமாகவும் கொடுக்கப்பட்டது. இத்தனைக்கும் வாரத்தில் ஒருநாள் மட்டுமே படப்பிடிப்பு நடக்கும். மொத்தம் 100 நாட்கள். எனவே, 15 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். 100 கோடி வரை சம்பளம் கொடுப்பார்கள்.
ஆனால், நிகழ்ச்சியை சரியாக நடத்த ஆளுமை வேண்டும். போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். தவறு செய்தவர்களை கண்டிக்க வேண்டும். சொல்லும் நபர் மதிப்புமிக்க மனிதராக இருக்க வேண்டும். இல்லையெனில் போட்டியாளர்கள் கேட்கமாட்டார்கள். கமல் இதற்கு பொருத்தமாக இருந்தார்.
இப்போது 8வது சீசனை நான் நடத்தவில்லை என அவர் சொல்லிவிட்டார். எனவே, விஜய் சேதுபதி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே, கமல் அளவுக்கு விஜய் சேதுபதி ஸ்கோர் செய்வாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஏனெனில், விஜய் சேதுபதி பொறுமையாக பேசுவார்.
கோபப்பட மாட்டார். நிறைய தத்துவமாக பேசுவார். இதை அவரின் பேட்டிகளை பார்த்தாலே புரியும். குறிப்பாக, பிக்பாஸ் வீட்டிற்கு போகும் எல்லோருமே முதல் பரிசை வாங்க வேண்டும் என்கிற முனைப்பில் இருப்பார்கள். ஆனால், விஜய் சேதுபதி தத்துவமாக பேசி பணம் பெரிதல்ல என்கிற மனநிலையை போட்டியாளர்களிடம் உருவாக்கிவிட்டால் காமெடியாகி விடும்.
ஆனால், விஜய் டிவி அதை அனுமதிக்க மாட்டார்கள். இரண்டு டீம்களுக்கு இடையே சண்டை மூட்டி விட வைக்க வேண்டும் என அவரிடம் சொல்வார்கள். விஜய் சேதுபதி இதை எப்படி செய்யப்போகிறார் என்பதுதான் தெரியவில்லை. கமல் இல்லாத பிக்பாஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். வருகிற அக்டோபர் மாதம் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளது. விரைவில் முதல் புரமோஷன் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.