தயாரிப்பாளரிடம் சவால் விட்ட எம்ஜிஆர்… 100 ரூபாய் பந்தயத்தில் ஜெயிச்சது யாரு?

Published on: August 14, 2024
MGR
---Advertisement---

சிவாஜியை வைத்துப் பல படங்களைத் தயாரித்து இயக்கியவர் முக்தா சீனிவாசன். இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர். அப்போது இருந்தே எம்ஜிஆருக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆர் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படத்திலே உதவிய இயக்கனராக மசீனிவாசன் இருந்தார்.

புதிய படத்திலே முக்தா சீனிவாசனைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்த எம்ஜிஆர் அவரைத் தன் வீட்டுக்கு இரவு சாப்பிட வாங்க என அழைத்தார். சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது அந்தக் கம்பெனியைப் பற்றித் தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினார் முக்தாசீனிவாசன்.

MGR
MGR

‘இந்தக் கம்பெனியைப் பொருத்தவரை ஒரு மாதிரியான கம்பெனி. மது ஆறாக ஓடும். நடிக்க வர்ற நடிகர்களுக்கு பெண்களை அனுப்பி வைப்பாங்க. இந்தக் கம்பெனிக்கு நீங்க நடிக்க வந்துருக்கீங்க. நீங்க எப்படிப்பட்டவர்னு எனக்குத் தெரியும். இதுல இருந்து எப்படித் தப்பிக்கப் போறீங்க?’ன்னு எம்ஜிஆரைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு எம்ஜிஆர், ‘என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா, நான் இது போன்ற சபலங்களுக்கு எல்லாம் ஆளாக மாட்டேன்’னு சொல்கிறார். அதற்கு ‘மனித மனம் இதுபோன்ற சஞ்சலத்துக்கு ஆளாவது சகஜம் தானே’ என்றார் சீனிவாசன். ‘சரி. நமக்குள் 100 ரூபாய் பந்தயம். இந்தப் படம் முடியுற வரைக்கும் இங்க தான் நாம ஒண்ணா பணியாற்றப் போறோம். படம் முடிஞ்சதுக்கு அப்புறம் நாம பேசுவோம்’ என்றார் எம்ஜிஆர்.

அதே மாதிரி எம்ஜிஆருக்கு அந்தப் படத்துல நடிக்கும்போது பல வலைகள் வீசப்பட்டன. ஆனால் எதுலயுமே அவர் சிக்கல. படம் ஒரு வழியாக முடிந்தது. சென்சாருக்கு அந்தப் படம் போனது. ஒரு கட் கூட இல்ல. அந்த மகிழ்ச்சியான செய்தியை எம்ஜிஆரிடம் பரிமாறிக் கொண்டார் முக்தா சீனிவாசன். ‘அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல 100 ரூபாயை எடு’ என்றார்.

‘ஏன் மறந்து போச்சா. என்ன சொன்ன? அவங்க வீசுன வலையில நான் சிக்குவேன்னு சொன்னாயே.. நீயும் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டுத் தானே இருந்தே. அவங்க வீசுன வலையில நான் சிக்குனேனா’ன்னு கேட்டார். அப்போது முக்தா சீனிவாசனிடம் பதிலே இல்லை. ஒரு முறை பத்திரிகை பேட்டியில் முக்தா சீனிவாசன் இப்படி கூறினாராம்.

அந்தக் கம்பெனியைப் பொருத்த வரை எம்ஜிஆருக்கு அவர்கள் வைத்த பொறியிலே 10ல் 1 பங்குலயே பல நடிகர், நடிகைகள் விழுந்துருக்காங்க. ஆனா எம்ஜிஆர் அதுல இருந்து தப்பிச்சாருன்னா மனம் தான் காரணம்னு தெரிவித்தாராம். மேற்கண்ட தகவல்களைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.