தங்கலானுக்கு விருது கொடுக்கலனா பிரச்சனை பண்ணுவோம்!… பொங்கும் ரசிகர்கள்!…

Published on: August 15, 2024
vikiram
---Advertisement---

Thangalaan: சேது திரைப்படம் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து காட்டினார் விக்ரம். அந்த படத்திற்காக மொட்டை போட்டு, உடல் உடை குறைத்து மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். குறிப்பாக, படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களை உருக வைத்தது.

அந்த படத்திலிருந்தே விக்ரமுக்கு ரசிகர்களும் உருவானார்கள். தில், தூள், சாமி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் இடையிடையே நடிப்புக்கு தீனி போடும் கதைகளை தேர்ந்தெடுத்தும் நடிப்பது விக்ரமின் வழக்கம். இன்னும் சொல்லப்போனால் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்கிற தாகம் அவரிடம் எப்போதும் உண்டு.

vikram
vikram

அதனால்தான் காசி, அந்நியன், ஐ போன்ற படங்களில் நடித்தார். ஐ படத்திற்காக அவர் கொட்டிய உழைப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. உடலில் பாதி உடையை குறைத்து மெலிந்து கூனன் போல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள தங்கலான் படத்திலும் தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார் விக்ரம்.

தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பு அசத்தலாக இருப்பதாக படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் சொல்லி வருகிறார்கள். தங்கலான் படம் விக்ரமுக்காகவே பார்க்கலாம் எனவும் பலரும் சொல்கிறார்கள். சுதந்திர காலகட்டத்திற்கு முன்பு தங்க சுரங்க வயலில் வேலை செய்த தமிழர்கள் பற்றிய கதை இது.

vikram
vikram

வெள்ளையர்கள் எப்படி மக்களை ஒடுக்கி, மிரட்டி வேலை வாங்கினார்கள் என இப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் தங்கலானாகவே விக்ரம் வாழ்ந்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. விக்ரமுக்கு விருது கொடுக்கவில்லை எனில் பிரச்சனை செய்வோம் எனவும் ஒரு ரசிகர் சொல்லும் வீடியோவும் வெளியானது.

நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் என்றாலே விக்ரமுக்கு அல்வா சாப்பிடுவது போலத்தான். இதை ஏற்கனவே, காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களில் அவர் நிரூபித்து காட்டியிருக்கிறார். இப்போது விக்ரமின் திரைவாழ்வில் தங்கலான் படமும் ஒரு முக்கிய படமாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க: தங்கலானை தூக்கி சாப்பிட்ட டிமான்டி காலனி 2.. இனிமே பேசுவீங்க பிரியா பவானிசங்கர்.. படம் எப்படி இருக்கு?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.