மூன்றாவது நாளிலேயே படம் ஓடாதுனு நினைச்சு விஜயகாந்த் செய்த காரியம்! அதுதான் கேப்டன்

Published on: August 17, 2024
vijayakanth (1)
---Advertisement---

Vijayakanth: தமிழ் சினிமா வராற்றில் ஒரு அழிக்க முடியாத நடிகராக மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்பவர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் நம் மனதில் என்றும் நீங்காத இடத்தை பிடித்த திரைப்படங்களாக ரமணா, சத்ரியன், ஆனஸ்ட்ராஜ், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களை குறிப்பிடலாம்.

சினிமாவில் தனக்கென ஒரு தனி அந்தஸ்தை பெற்று விளங்கிய விஜயகாந்த் அடுத்ததாக அரசியலிலும் களம் இறங்கி சினிமாவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிக் கொண்டார். அதன் பிறகு ஒரு முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட விஜயகாந்த் எம்ஜிஆரை போலவே மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவராக விளங்கினார்.

இதையும் படிங்க:கவர்ச்சி காட்டி நடிச்சி அந்த படத்தோட வாய்ப்பு போச்சி!.. புலம்பும் பிரபல நடிகை….

மக்களுக்காக குரல் கொடுத்து வந்த விஜயகாந்தை ரசிகர்கள் ஒரு முறை எதிர்க்கட்சி தலைவராக நிறுத்தி அழகு பார்த்தார்கள். அதன் பிறகு அவருடைய உடல் நலன் மோசமடைய அரசியலில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. நல்ல நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என அடித்து சொல்லலாம்.

என்ன உணவு சாப்பிட்டாலும் அதே உணவை தான் படப்பிடிப்பில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என எப்பொழுதுமே நினைப்பவர் விஜயகாந்த். என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு வேண்டும் என்பதை அள்ளி அள்ளி கொடுப்பவர்.  ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு மாபெரும் நடிகராக இருக்கும் விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய ஏணியாக இருந்தவரும் விஜயகாந்த்தான்.

இதையும் படிங்க:மாயமான சூர்யா! ஸ்தம்பித்த படக்குழு.. சூர்யா 44ல் நடந்தது என்ன?

தயாரிப்பாளர் நலனில் எப்பொழுதுமே அக்கறை கொண்டவராக இருப்பவர் விஜயகாந்த். அந்த வகையில் தான் நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அதாவது மூன்றாவது நாளிலேயே அந்த படம் ஓடாது என அறிந்து கொண்ட விஜயகாந்த் பட குழுவை அழைத்து படத்தின் கதை வேறொரு போக்கில் சென்று கொண்டிருக்கின்றது.

படம் ஓடாது என கூறி என் சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்கிறேன் என கூறினாராம். இதைக் கேட்டதும் படக் குழுவுக்கு ஒரே அதிர்ச்சியாம். இருந்தாலும் எடுத்த வரைக்கும் எடுப்போம் என மேலும் படத்தை முடித்து படத்தை ரிலீஸ் செய்ய விஜயகாந்த் சொன்னதைப் போலவே படம் ஓடவில்லை. சொன்னதை போல அவருடைய சம்பளத்தில் பாதியை மட்டும் வாங்கிக் கொண்டாராம் விஜயகாந்த். இந்த அறிய தகவலை பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க:நடிகரால் முட்டுக்கட்டையான கேஜிஎஃப் 3 படத்தின் ஷூட்டிங்.. என்னங்க இப்படி ஆச்சு?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.