Connect with us
BP

latest news

சினிமாவில் பானுப்பிரியா நடிக்காதது இதுக்குத்தானா? அவருக்கு சரியான ஜோடி அந்த ஹீரோவாம்..!

1967ல சின்ன வயசிலயே மிகப்பெரிய டான்சர். அவங்க டப்பிங்லாம் கூட பண்ணியிருக்காங்க. அவங்க ஹீரோயினாகவே 155 படங்களுக்கும் மேல ஆக்ட் பண்ணியிருக்காங்கன்னு பிரபல நடிகை குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். இவர் பானுப்பிரியா பற்றி மேலும் என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

இது மிகப்பெரிய விஷயம். அவங்க ஸ்ரீதேவிக்கு முன்னாடியே வந்துட்டாங்க. ஆனா அவங்க பாம்பேக்கு போனதும் அந்த இடத்துல கரெக்டா வந்துட்டாங்க பானுப்பிரியா.

அவங்க மேக்கப்பை அவ்ளோ பொறுமையா போடுவாங்க. அவங்க ஹேர் டிரஸ் பண்றதும் அந்த யூனிட்ல இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கும்.

சத்ரியன் படத்துக்கு சுபாஷ் சார் தான் தயாரிச்சார். அவரு ஒரு பாட்டுக்காக அந்தமான் போறாரு. கிருஷ்ணன் பஞ்சுன்னு இருக்கிற இரட்டை இயக்குனர்களின் கிருஷ்ணனின் மகன் தான் சுபாஷ். ‘மாலையில் யாரோ மனதோடு பேச’ என்பது தான் அந்தப் பாடல். யூனிட்டுக்கே 8 பேர் தான். அந்தப் பாட்டுக்கு கோரியோகிராபி பானுப்பிரியா தான். ஒரே நாளில் எடுக்கப்பட்ட பாடல் அது. மரத்துக்குப் பின்னாடியே டிரஸ் எல்லாம் மாத்திக்கிட்டாராம்.

எல்லாருக்கும் வர்ற காதல் பானுப்பிரியாவுக்கும் வருது. ஆனா தொடர முடியல. அவங்க அம்மா அதைக் கட் பண்ணிடுறாங்க. அந்த நடிகருக்குப் பல பேரோட காதல். அதனால அவங்க நல்லபடியா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆனா அது விரிசலானது தான் புரியாத புதிர். அண்ணனும், அம்மாவும் தான் அவங்களுக்கு எல்லாமும். பானுப்பிரியாவுக்கு ஒரு சகோதரி நிஷாந்தி. அவங்களும் ஆக்டர் தான்.

sathriyan

sathriyan

பானுப்பிரியாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை வருது. வீட்டை விட்டு வெளியே வருது. அப்போ அவங்க ஏவிஎம்ல வாழ்க்கை சீரியல்ல நடிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு ஸ்டூடியோவுக்குள்ளேயே ஒரு வீடு தயார் பண்ணிக் கொடுக்குறாங்க.

அப்புறம் கல்யாணம் பண்ணி அமெரிக்காவுல செட்டாயிடுறாங்க. சிலர் கணவர் இறந்துட்டதா சொல்றாங்க. சரியான தகவல் தெரியல. நடிகர் சங்க தேர்தலுக்குத் தான் ஓட்டுக்காக அவரைப் போய் பார்த்தேன். அப்போ ரொம்ப மாறிட்டாங்க. குண்டா இருந்தாங்க. சிரிப்பு இல்ல. வெறுமையா இருந்தாங்க. அவரோட மகளை அறிமுகப்படுத்தினாங்க. அவங்களுக்காகத் தான் நான் வாழறேன்னு சொல்றாங்க. அவரு கூட நடிச்சதுல அருமையான ஜோடி கார்த்திக். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் ஏன் தற்போது நடிக்கலன்னு பானுப்பிரியாவிடம் கேட்டதற்கு இப்போ ஞாபகமறதியாயிடுச்சு. டயலாக்லாம் முன்ன மாதிரி பேச முடியலன்னு பானுப்பிரியாவே சமீபத்தில் பேட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top