Connect with us

latest news

இவங்கள பாக்குறதுக்கு சும்மா இருக்கலாமே…பிக்பாஸ் சீசன் 8ல் மொத்தமா களமிறங்கும் விஜய் டீம்…

Biggboss tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இதன் போட்டியாளர்கள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது.

ரியாலிட்டி ஷோவில் மாஸ் காட்டி வருவது பிக்பாஸ் தமிழ். ஏற்கனவே ஏழு சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் இந்த வருடம் எட்டாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் பெரிய வெற்றிக்கு காரணமே நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுதான்.

இதையும் படிங்க: இதுதான் ஹிஸ்ட்ரி! தொடர்ந்து சாதனை படைத்து வரும் மகாராஜா.. என்ன மேட்டர் தெரியுமா?

ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு விதமான கெட்டப்பில் வந்து வாராவாரம் அவர் கொடுக்கும் பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்தது. ஆனால் இந்த சீசன் தொடக்கத்திலேயே தான் இந்த சீசனை தொகுத்து வழங்குவதிலிருந்து பின்வாங்கிக் கொள்வதாகவும் தனக்கு சினிமா வேலைகள் இருப்பதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தனர். தற்போது கமல் இடத்தை சரியான ஒரு நடிகரை வைத்து நிரப்ப வேண்டும் என்பதே விஜய் டிவியின் முதல் விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேசி முடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மகாராஜாவை மிஸ் பண்ணது இதனால்தான்.. ஒருவழியா விஷயத்தினை சொல்லிட்டாரு ஷாந்தனு..

இது குறித்த ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் போட்டியாளர்கள் சுவாரசியமாக இருந்தால் தான் நிகழ்ச்சியும் கலைக்கட்டும் என்பதால் குக் வித் கோமாளியில் இருந்து முக்கிய பிரபலங்களாக ஆறு பேரை நிகழ்ச்சிக்குள் அழைத்து வர டிவி நிர்வாக முடிவு செய்திருக்கிறதாம். இதனால் நிகழ்ச்சியும் மேலும் கலகலப்பாகவும் வரவேற்பை ரசிகர்களும் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

cook with comali

இந்த நிகழ்ச்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கும் நிலையில், ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்கள்னு ஒரு நாலு பேரு நிகழ்ச்சிக்குள்ள வந்துருவாங்க. இதுல குக் வித் கோமாளி டீமையே மொத்தமா இறக்கிட்டா புதுமுகம் இல்லாம இந்த நிகழ்ச்சி போர் அடிக்குமே என ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top