புயல்ல கொடி கிழிஞ்சிரும்! எல்லாம் ஓவர் ஆக்டிங்.. விஜய் அரசியல் பற்றி தயாரிப்பாளர் ஆவேசம்

Published on: August 24, 2024
vijay
---Advertisement---

K.Rajan: விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தியதில்  இருந்து பல அரசியல் பிரமுகர்களிடமிருந்தும் தொண்டர்களிடமிருந்தும் ஏன் சினிமா பிரபலங்களிடம் இருந்தும் ஏகப்பட்ட கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் பிரபல சினிமா தயாரிப்பாளரான கே ராஜனும் அவருடைய கருத்தை பதிவிட்டு இருக்கிறார் .

கே ராஜன் குறிப்பிடும்போது ஒரு கட்சி பாடலைத் தானே அறிமுகப்படுத்தினார்கள். அதில் தர்மத்தின் தலைவன் மக்கள் தலைவன் இப்படித்தான் வார்த்தைகள் இருந்தன. அழும் அளவுக்கு அதில் என்ன இருந்தது? புஸ்ஸி ஆனந்த் அந்த பாடலைக் கேட்டு அழுததெல்லாம் ரொம்ப ஓவர். ஓவர் ஆக்டிகாக இருந்தது. பக்கத்துல ஒரு பெரிய நடிகரே இருக்கிறார். அவர் இருக்கும்போது விஜயை விட பிரமாதமாக நடிக்கிறார் புஸ்ஸி ஆனந்த் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியை வெறுக்கும் சர்ச்சை பிரபலத்தின் கணவர்… பிக்பாஸ் எண்ட்ரி சூடு பிடிக்குமா?

அவர் அழுததெல்லாம் அவசியம் இல்லாதது. எல்லாருமே கிண்டல் செய்கிறார்கள். அழும் அளவுக்கு அந்த பாடலில் ஒன்றுமே இல்லை. பாடலைக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம். நீங்க தானே எழுதி இருக்கிறீர்கள். அப்புறம் ஏன் அதைக் கேட்டு அழுகிறீர்கள் என்று கே ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார். விஜய் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. நடிகராக இருக்கிறாரே தவிர அரசியலை இன்னும் தொடவில்லை.

இதற்கிடையில் இரண்டு உண்ணாவிரதம் பண்ணி இருக்க வேண்டும் அல்லது தைரியமாக தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து கேட்டிருக்க வேண்டும். அதனால் இன்னும் அவர் அரசியலுக்கு வரவில்லை என கூறியிருக்கிறார் கே ராஜன். மேலும் இப்பொழுது இருக்கிற கட்சிகளை விட நான் இரண்டு மடங்கு செய்வேன் என்பது மாதிரி ஏதாவது சில விஷயங்களை விஜய் சொல்லி இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: முக்கிய நடிகருடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்.. ஆனா இதுவரை நடக்காத ரூட்டாம்..

இதற்குள் அவர் நான்கைந்து அறிக்கைகளையாவது விட்டிருக்க வேண்டும். என்ன கருத்து சொன்னார் விஜய்? மத்திய அரசை பாஜக என்று பெயர் சொல்லவே பயப்படுகிறார் விஜய் என்றும் கே ராஜன் பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மேடையில் பேசும்போது கூட கொஞ்சம் பின்வாங்கியே தான் பேசுகிறார் .அதற்கு ஒரு காரணம் பணம் தான்.

இன்னொரு பக்கம் மத்திய அரசு. இவர் ஏதாவது பேசி மேலிடத்திலிருந்து அசம்பாவிதங்கள் நடந்தால் என்ன செய்ய முடியும்? அதன் காரணமாக கூட அவருடைய பேச்சில் பின்வாங்குவதாக தெரிகிறது. ஏனெனில் இவர் ஏதாவது பேசி மேலிடத்திலிருந்து ஒரு பொய் வழக்கு கூட விஜய் மீது போடலாம். பிறந்ததிலிருந்து செல்வ செழிப்பில் வளர்ந்தவர். சிறை என்றால் தெரியாது.

இதையும் படிங்க: விடுதலை தயாரிப்பாளருக்கு வெற்றிமாறன் கொடுத்த அதிர்ச்சி!.. மீண்டும் மீண்டுமா?!..

அரசியல்வாதி என்றால் கண்டிப்பாக ஜெயிலுக்கு போக வேண்டும். அதற்கெல்லாம் அவர் தயாரா?அந்த அளவுக்கு பக்குவம் உண்டா என்பதை அவர்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் புயல் கிளம்பி விட்டது, புயலில் கொடி பறக்கப் போகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் புயலில் கொடி கிழிந்துதான் போகும். ஆனால் தென்றலில் கொடி அழகாக பறக்கும். அந்த தென்றலாக விஜய் இருக்க வேண்டுமே தவிர புயலாக இருக்க வேண்டாம். தேவைப்படும் பொழுது புயலாக மாறினால் போதும் என்றும் கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.