Connect with us
vetrimaaran soorie

Cinema News

விடுதலை தயாரிப்பாளருக்கு வெற்றிமாறன் கொடுத்த அதிர்ச்சி!.. மீண்டும் மீண்டுமா?!..

Viduthalai 2: பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதன்பின் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் மற்றும் திரைக்கதை என இரண்டு தேசிய விருதுகளை வாங்கினார் வெற்றிமாறன்.

அதன்பின் விசாரணை படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றிமாறனுக்கு தேசிய விருதை பெற்று தந்தது. மீண்டும் தனுஷை வைத்து வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கினார். இதில் அசுரன் படம் தேசிய விருதை பெற்றது. அதன்பின் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை படத்தை இயக்கினார்.

இதையும் படிங்க: கூலி படத்திலும் மல்ட்டிஸ்டார் கூட்டணியா? ஆனா இந்த முறை வச்சதுதான் செம ட்விஸ்ட்டு!..

இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இந்த படத்தில்தான் சூரி கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார். இந்த படத்திற்கு பின் கருடன், கொட்டுக்காளி என ஹீரோவாக கலக்கி வருகிறார். அதோடு, 8 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். கடந்த வருடம் மார்ச் மாதம் விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியானது. அப்போதே அதிகமான காட்சிகளை எடுத்தார் வெற்றிமாறன். எனவே, அந்த காட்சிகளை வீணடிக்க வேண்டாம். 2ம் பாகம் எடுக்கலாம் என தயாரிப்பாளரிடம் சொன்னார் வெற்றிமாறன்.

அதற்கு தயாரிப்பாளரும் சம்மதிக்க இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. வெற்றிமாறனுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவருக்கு தோன்றும் காட்சிகளை எடுத்துக்கொண்டே இருப்பார். ரிலீஸ் தேதி பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். மிகவும் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்துவார். விஜய் சேதுபதி கடந்த 2 வருடங்களுக்கும் மேல் விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களுக்காக நடித்து கொடுத்திருக்கிறார்.

viduthalai

#image_title

இந்த படம் துவங்கியது முதல் இடையில் கிடைக்கும் நேரத்திலேயே அவர் சில படங்களில் நடித்து அந்த படங்களெல்லாம் ரிலீஸே ஆகிவிட்டது. ஆனால், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடிய இல்லை. சமீபத்தில் 25 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இன்னும் 2 மாதங்கள் படப்பிடிப்பை நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறாராம்.

மேலும், இப்போது 4 மணி நேரத்திற்கும் மேல் படம் இருப்பதால் அதை 3ம் பாகமாக எடுத்துவிடலாம் என சொல்லி தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்திருக்கிறாராம். இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளரோ ‘அதெல்லாம் வேண்டாம். விடுதலை 2-வை சீக்கிரம் முடித்து கொடுங்கள் போதும்’ என் சொல்லி இருக்கிறார். ஆனால், விடுதலை 3 என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருக்க இப்போது சிலரை வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.

இதையும் படிங்க: என் மகனிடம் விஜய் இப்படி சொல்லுவாருனு நினைக்கல.. பிரேமலதா சொன்ன தகவல்

google news
Continue Reading

More in Cinema News

To Top