Connect with us

Cinema News

நீங்க தங்கம் சார்… ரஜினிகாந்த் குறித்து அந்த ஸ்டாரே இப்படி சொல்லிட்டாரே…

Rajinikanth: தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பஞ்சாயத்து பல நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் முக்கிய ஸ்டார் ஒருவர் இதை மீண்டும் உறுதி செய்து ரசிகர்களிடம் அப்பிளாஸ் பெற்று இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை பல வருடமாக நிலைநாட்டி வருபவர் ரஜினிகாந்த். அதேவேளையில் பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து போராடி தன்னுடைய இடத்தை மாற்றி இன்று பெரிய உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இதை தொடர்ந்து வாரிசு பட நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என பேசி இருப்பார்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்திலும் அந்த நடிகை!.. இவர் அஜித்தே விடவே மாட்டார் போல!….

அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் அப்போது அங்கு இருந்த நடிகர் விஜய் அதை மறுத்து பேசவில்லை என்பதும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரும் அதை ஒப்புக்கொண்டதாக ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று பல பிரபலங்களிடமும் கேள்வியாக வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து செய்லர் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை கூற ஏற்கனவே இருந்த பஞ்சாயத்தில் மீண்டும் நெருப்பை கொட்டும் அளவுக்கு பிரச்சினை சூடு பிடித்தது. தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் விதமாக ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியது.

#image_title

இதைத்தொடர்ந்து விஜய்யின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் என தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்தார். இருந்தோம் விஜய் ரசிகர்கள் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுப்பதை இன்னும் நிறுத்தவில்லை. இந்நிலையில், கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் கலந்து கொண்ட ஒரு விழாவில் அவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?

அந்த வீடியோவைக் காண: https://x.com/realrawrathesh1/status/1826999859561533549
author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top