Connect with us

latest news

ஸ்ருதியிடம் உண்மையை சொன்ன மீனா… பங்ஷனுக்கு வரும் கோபி… திட்டு வாங்கும் தங்கமயில்..

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் வீட்டிற்கு வரும் மனோஜ் மற்றும் ரோகினி கடையில் வியாபாரம் நல்லபடியாக ஆனதாக கூறுகின்றனர். ஆனால் விஜயா குழந்தை பற்றி பேசுகிறார். இதை மீனா அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போ அங்கு வரும் ரவி முத்துவின் விஷயத்தை கூறி சந்தோஷப்படுகிறார்.

இதைக் கேட்கும் விஜயா மற்றும் மனோஜ் நக்கலாக பேசுகின்றனர். ஆனால் முத்து பிரசவ ட்ரிப்பில் பெண்ணுக்கு ஓவராக வழி எடுக்க மார்க்கெட்டில் வண்டியை நிறுத்தி தெரிந்தவர்களை வைத்து அங்கேயே பிரசவம் பார்க்க வைத்திருக்கிறார். இதை கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

இதையும் படிங்க: 16 வயதினிலே டயலாக்கை நினைவுபடுத்திய மாரிசெல்வராஜ்… செம ஃபன்னியா இருக்கே!

விஜயா வீட்டின் அவரிடம் நம்ம வீட்ல ஒன்னும் நடக்க மாட்டேங்குது என்கிறார். ரோகிணி தான் முதல் குழந்தைக்கு அம்மாவாக வேண்டும் என்கிறார். இதை கேட்கும் மீனா கையில் வைத்திருந்த பாத்திரத்தை அதிர்ச்சியுடன் கீழே போடுகிறார். பின்னர் அவர் பூஜையறையில் இருக்க ஸ்ருதி முத்துவை பாராட்டி பேசுகிறார்.

Pandian stores

ஆனால் மீனா எதுவும் பேசாமல் இருக்க என்ன ஆச்சு என கேட்கிறார். அவரிடம் ரோகிணியின் இரண்டாவது குழந்தை பற்றிய விவரத்தை கூறுகிறார் மீனா. இதனால் ஸ்ருதி அதிர்ச்சியாக இருக்கிறார். பாக்கியலட்சுமி தொடரில் எழில் பங்க்ஷன்க்கு வர எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். கோபி செழியனுக்கு கால் செய்து இந்த நேரத்தில் நீங்கள் வெளியில போறது நல்லா இருக்கா எனக் கேட்கிறார்.

இதையும் படிங்க: வசூலை வாரிக்குவிக்கும் வாழை… 3 நாளில் இத்தனை கோடியா?…

எழில் போனது கஷ்டமா தான் இருக்கு ஆனா தாத்தாவோட எண்பதாவது பிறந்தநாளை கொண்டாடனும் இல்ல என்கிறார். இதைக் கேட்ட கோபி இதை எப்படி மறந்தேன் எனக்கு ஒரு தானும் கோயிலுக்கு கிளம்பி வருகிறார். அங்கு வந்து பாக்கியாவை முறைத்துக் கொண்டு நிற்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்கமயில் அனுப்பிய புகைப்படத்தை எல்லோரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அவர் அம்மா கால் செய்து இப்படி எல்லாமா போட்டோ அனுப்புவ எனக் கேட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். முத்துவேல் வீட்டில் பிரச்னை அதிகமாகி கொண்டு இருக்கிறது. ராஜீ கோச்சிங் குறித்து பாண்டியன் கேட்டுக்கொண்டு இருக்கிறார். செந்தில் மற்றும் கதிர் இருவரும்  சரவணனுக்கு கால் செய்து கலாய்த்து கொண்டுள்ளனர்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top