Cinema History
அந்த குழந்தையே நீங்கதான் சார்!. அஜித்திடம் கதை சொல்லி பல்பு வாங்கிய நடிகர்!….
ஒரு திரைப்படத்தின் முக்கிய ஆதாரமே அந்த படத்தின் கதைதான். இயக்குனர் முதலில் ஒரு கதையை எழுதி அந்த கதையைத்தான் திரைக்கதையாக மாற்றுவார். அதோடு, தனது உதவியாளர்களிடமும், கதை ஞானமுள்ளவர்களிடமும் அந்த கதை பற்றி விவாதித்து காட்சிகளை அமைப்பார். எல்லோரும் கருத்து சொன்னாலும் இறுதி முடிவை இயக்குனரே எடுப்பார்.
சினிமா துவங்கியது முதல் இப்போது வரை இதுதான் நடைமுறையில் இருக்கிறது. இதில் வெற்றிமாறன், பாலா போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே சொந்தமாக கதை எழுதாமல் நல்ல நாவல்களை தங்கள் பாணியில் திரைப்படமாக மாற்றுவார்கள். அதிலும் வெற்றிமாறன் இதைத்தான் தொடர்ந்து செய்து வருகிறார்.
இதையும் படிங்க: மலையாள சினிமாவுல மட்டும் தான் அது நடக்குதா? ஊர்வசி சொல்லும் அந்தக் காரணம்!
சினிமாவில் கதை சொல்லி ஒரு நடிகரை கவர்வது எல்லோருக்கும் கை வராது. மணிரத்னம், கௌதம் மேனன் போன்ற சிலருக்கு சரியாக கதை சொல்ல வராது. ஆனால், திரைப்படத்தை நன்றாக எடுத்து விடுவார்கள். ஆனால், சீமான், எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் கதை சொன்னால் கதை கேட்கும் நடிகர்கள் மயங்கிவிடுவார்கள்.
குஷி படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வசந்த் விஜயிடம் ‘இந்த படத்தில் என்ன கதை இருக்கிறது என நீ நடிக்க ஒத்துக்கிட்ட?’என கேட்டிருக்கிறார். அதற்கு விஜய் ‘சார்.. எஸ்.ஜே.சூர்யான்னு ஒருத்தர் இருக்கார். அவர் கதை சொல்லி நீங்க கேட்கணும்’ என்றாராம். பல நடிகர்கள் இப்படி கதை சொல்லும் ஸ்டைலில் மயங்கி நடிக்க ஒப்புக்கொள்வதுண்டு.
மண்டேலா, மகாராஜா உள்ளிட்ட பல படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்தவர் கல்கி ராஜா. மகாராஜா படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த நட்டியிடம் வேஷ்டியை மேலே தூக்கி அடி வாங்கும் வேடத்தில் வருவார். இவர் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார்.
அதில் அஜித் நடித்த அசல் படமும் ஒன்று. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கல்கி ராஜா ‘ஒருநாள் அஜித்திடம் ஒரு கதை சொன்னேன்ன். ஒரு அம்மா பிரசவ வலியில் துடிக்கிறாங்க.. ஆபரேஷன் செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என டாக்டர் சொல்றாரு. ஏன்னு கேட்டால் குழந்தையின் தல பெருசா இருக்குன்னு சொல்றாரு. உடனே தல அஜித்துன்னு டைட்டில் போடுறோம் சார்’ என சொன்னேன். அஜித் சார் அப்படியே திரும்பி என்னை ஒரு லுக் விட்டாரு. அவ்வளவுதான் எஸ்கேப் ஆயிட்டேன்’ என சொல்லி சிரிக்கிறார் ராஜா.
இதையும் படிங்க: பென்ஸ் கார்ல வந்து இறங்கிட்டு பிற்படுத்தப்பட்டவர்னு சொன்னா எப்படி? யாரை தாக்குகிறார்?