Connect with us
shakeela

Cinema News

ஓகே சொல்லாமலா வர்றாங்க! சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை தெரியுமா? பொங்கிய ஷகீலா

Shakeela: மலையாள சினிமாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்சனைகள் பெரிய அளவில் சென்று கொண்டிருக்கின்றது. இதில் அம்மா என்ற பெயரில் அங்கு செயல்பட்டு வரும் நடிகர் சங்கம் ஒட்டுமொத்தமாக அந்த சங்கத்தையே கலைத்து இருக்கிறார்கள். அதில் மோகன்லால் ஒரு முக்கிய உறுப்பினராக இருக்கிறார் .அவரும் அந்த சங்கத்தில் இருந்து விலகி விட்டார்.

தொடர்ந்து இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் ,நடிகர்கள் என அவர்கள் மீது  மலையாளத்தில் நடிகைகள் புகார் கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை ஷகீலா இந்த மாதிரி பிரச்சனைகள் ஏன் வருகின்றன? இன்னும் என்னெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: நீங்கலாம் மனுசன்தான!.. எங்கள பாத்தா எப்படி இருக்கு?!.. மாரி செல்வராஜை திட்டும் நடிகர்!…

அவர் கூறும் போது மலையாளத்தில் மட்டும் இந்த பிரச்சனை நடப்பதில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் தான் இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது. ஹேமா கமிட்டி என்ற ஒரு அமைப்பு அங்கு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகிறது. அந்த கமிட்டியை இங்கு தமிழிலும் கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் எல்லாரும் சிக்குவார்கள்.

இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் பெயர்கள் வெளிவந்தால் நான் இன்னும் சந்தோஷப்படுவேன் என கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அக்ரிமெண்டிலேயே அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதம் இருந்தால் மட்டும் வாய்ப்பு என்று சொல்லித்தான் நடிகைகளையே ஒப்பந்தம் செய்கிறார்கள். வாய்ப்பு வேண்டும் என்பதற்காக ஒரு சில நடிகைகளும் அந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒப்புக்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க:  கோட் படத்துக்கு வந்த புது சிக்கல்… என்ன சொல்கிறார் திரையரங்கு உரிமையாளர்?

அதுதான் அவர்கள் செய்கிற முதல் தவறு. சும்மா தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இவர்களையே குறை சொல்லாமல் நடிகைகளும் சில சமயங்களில் வளைந்து கொடுக்கிறார்கள். அதை அவர்கள் முதலில் தடுக்க வேண்டும் என ஷகிலா கூறியிருக்கிறார். மேலும் பிரபல சீரியல் நடிகை ரூபாஸ்ரீக்கு நடந்த ஒரு பயங்கர கொடுமை பற்றி ஷகிலா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஒரு அறையில் ரூபாஸ்ரீ தங்கி இருந்தாராம். அவருக்கு எதிர் அறையில் ஷகிலா மற்றும் அவருடைய தம்பி, காஸ்டியூம் டிசைனர் என இவர்களுடன் தங்கி இருந்தாராம். பெரும் சத்தம் கேட்டு கதவை திறந்த ஷகிலாவுக்கு பெரும் அதிர்ச்சி. ஏனெனில் ரூபாஸ்ரீ கதவு அறையை ஒரு நான்கு பேர் சேர்ந்து குடித்துவிட்டு வெளியே வா வெளியே வா என கூச்சலிட்டு கொண்டு தட்டினார்களாம்.

இதையும் படிங்க: வாழைப் படத்தின் கதையை முதலில் சொன்னது நான்தான்… யார்றா அது புதுசா இருக்கு..?

ரூபாஸ்ரீ கதவை திறக்கவே இல்லையாம். உடனே ஷகீலா மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நான்கு பேரையும் அடித்து விரட்டி இருக்கின்றனர். இதில் ஷகீலாவையும் அந்த கும்பல் அடித்தார்களாம். அதன் பிறகு ரூபாஸ்ரீயை வெளியே அழைத்து ஒரு காரை புக் பண்ணி சென்னைக்கு அனுப்பி வைத்தாராம் ஷகீலா.

rooba

#imaroobage_title

இதைப் பற்றி அவர் கூறும்போது நீங்கள் ஓகே என சொல்லப் போய்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். என்ன குடித்துவிட்டு வந்ததனால் தான் உங்களுக்கு பயமாகிவிட்டது. அதுவும் நான்கு பேர் சேர்ந்து வந்ததனால் கொஞ்சம் பயமாகிவிட்டது. நீங்கள் ஓகே சொல்லாமலா அவர்கள் வந்திருப்பார்கள்? அதனால் துணிந்து முடியாது என சொல்லுங்கள் எனஷகிலா கூறியிருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top