கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ சம்பளம் இதுதான்… அட்ரா சக்கை…

Published on: August 30, 2024
---Advertisement---

Vijayakanth: மறைந்த நடிகர் விஜயகாந்த் தற்போது ஏஐ மூலம் கோட் திரைப்படத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவருடைய சம்பளம் குறித்த முக்கிய தகவல்களும் தற்போது கசிந்து இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இன்று வலம் வந்தாலும் அவருக்கு சினிமாவில் சரியான தொடக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது என்னவோ நடிகர் விஜயகாந்த் தான். கிட்டத்தட்ட கோலிவுட்டில் தனக்கென இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்தார் விஜய். அப்பொழுது அவரை விஜயகாந்தின் படத்தில் நடிக்க வைக்க எஸ்ஏ சந்திரசேகர் கோரிக்கை விடுக்கிறார்.

இதையும் படிங்க: திரிஷ்யம் பிரபலமும் இப்படிதானா? ஊர்வசிக்கே பாலியல் சீண்டலால் சோதித்த இயக்குனர்…

அதனை எடுத்து செந்தூரப் பாண்டி திரைப்படத்தில் தன்னுடைய தம்பி என விஜயகாந்த் அடையாளப்படுத்திய பின்னரே விஜயின் சினிமா கேரியர் உச்சத்தில் உயர்ந்தது. அதைத்தொடர்ந்தும் திரையுலகத்தில் விஜயின் மீது விஜயகாந்த் என்றுமே தனி பிரியம் உண்டு.

Vijay

இதனால்தான் அவரின் இறப்புக்கு ஓடோடி வந்த நடிகர் விஜய் நின்று கண்கலங்கி சென்ற சம்பவமும் நடந்தது. இதைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகப் போகும் விஜய் தன்னுடைய கடைசி படத்தில் விஜயகாந்த் இடம் பெற வேண்டும் என விரும்பி இருக்கிறார்.

இதையும் படிங்க:  ஓவர் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு புஸ்ஸுனு போச்சே… கூலியில் இணைந்த அடுத்த பிரபலம்…

வெங்கட் பிரபு தொடர்ச்சியாக விஜயகாந்தின் குடும்பத்தினரிடம் பேசி அவருடைய ஃபுட்டேஜ்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இருந்தும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் விஜயை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விஜய் மூவரும் சென்று அவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏஐ மூலம் கோட் திரைப்படத்தில் இடம்பெற இருக்கும் விஜயகாந்திற்கு சம்பளமாக 50 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குரிய காசோலையை சமீபத்தில் அர்ச்சனா கல்பாத்தி மூலம் விஜயகாந்த் வீட்டினரிடம் ஒப்படைத்ததாகவும் தகவல்கள் கசிந்து இருக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.