NagaChaitanya: நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவிற்கு சமீபத்தில் நடிகை சோபித்த துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் சைதன்யாவின் தாயார் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து அவர் பேசியிருக்கும் சில விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
பிரபல நடிகர் நாகர்ஜுனாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி லட்சுமி டகுபதி. இவர் நாகர்ஜூனாவை திருமணம் செய்த சில வருடங்களிலே பிறந்தார். இத்தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகர் நாக சைதன்யா. லட்சுமி இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
Also Read
இதையும் படிங்க: கோட் ஹிட்டடிக்கும்.. மத்தவங்களுக்கு அனிருத் வேணும்… யாரோ தாக்கப்பட்டாங்களோ?
ஆனால் நாகர்ஜூனாவுடன் தான் தங்கி இருக்கிறார். முதலில் இது குறித்த தகவல் வெளியான போது தாயின் இரண்டாவது திருமணத்தில் பிரியம் இல்லாமல் தான் தந்தையுடன் சைத்தன்யா தங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ஒரு பேட்டியில் நாக சைதன்யா என் தாயுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் என்னுடைய சினிமா கேரியருக்காக தான் ஹைதராபாத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து நாகசைதன்யா மற்றும் சமந்தா திருமணத்தில் அவருடைய தாயார் லட்சுமி டகுபதி சிரித்த முகமாக கலந்து கொண்டத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதில் தாய் மற்றும் மகன் இருக்கும் புகைப்படங்கள் பலரிடம் அப்ளாசை அள்ளியது.
இதையும் படிங்க: குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..
ஆனால் சைதன்யாவின் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தத்தில் அவரின் தாயார் லட்சுமி கலந்து கொள்ளவில்லை. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரித்த போது, நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணத்தில் அவருடைய தாயாருக்கு சுத்தமாக விருப்பமில்லை என கூறப்படுகிறது.
எனக்கு மருமகள் என்றால் அது எப்போதுமே சமந்தா மட்டும்தான். அவர் ரொம்பவே தங்கமானவர். நாகார்ஜுனாவுடன் வளர்ந்ததால் தான் சைதன்யாவிற்கும் இரண்டாவது திருமண ஆசை வந்திருக்கிறது. இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் நிச்சயத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இருந்தும் லட்சுமி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.



