தளபதி 69ல அரசியல் அமர்க்களமா? இயக்குனர் சொல்றதை கேளுங்க…

Published on: September 1, 2024
thalapathi 69
---Advertisement---

விஜய் தற்போது நடித்து வரும் படம் கோட். இது அவரது 68வது படம். இன்னும் ஒரு படம் தான் பாக்கி. அது 69வது படம். அப்புறம் அரசியலில் முழுமூச்சாக ஈடுபட உள்ளார். கட்சிக் கொடி, கொள்கைப்பாடல் என அடுத்தடுத்த ஆயத்தப் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

அதை அடுத்து இன்னும் நான்கே நாள்களில் கோட் படம் ரிலீஸாக உள்ளது. அப்புறம் அரசியல் மாநாடு. விஜய் சினிமாவைப் போல அரசியலிலும் மாஸ் காட்டுவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது அரசியல் வருகைக்கு தளபதி 69வது படம் பெரிய அளவில் உத்வேகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதனால் விஜய் அரசியலில் இறங்கி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதெல்லாம் அந்தப் படத்தின் மூலம் காட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் அவரது பங்களிப்பு அரசியலிலும் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.

அதனால் படத்தை சிற்பம் போல செதுக்குவார் இயக்குனர் எச்.வினோத் என்பது தெளிவாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் தளபதி 69 படம் எப்படி இருக்கும் என்பதை ரத்தினச்சுருக்கமாகத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…

HVinoth
HVinoth

அந்த நிகழ்ச்சியில் விஜய் அரசியலுக்கு வந்துட்டாரு. அது அரசியல் படமா இருக்குமான்னு ஆங்கர் கேட்கிறார். அதுக்கு இயக்குனர் எச்.வினோத் சொன்ன பதில் இதுதான்.

இந்தப் படத்தை கமிட் பண்ணும்போதே இந்தப் படத்தை எல்லாரும் பார்ப்பாங்க. அரசியல் கட்சியினர் எல்லாரும் பார்ப்பாங்க. எல்லாரும் பார்க்கற படமாக இருக்கணும்கறது தான். அதனால ஒரு அரசியல்கட்சியையோ, அரசியல்வாதியையோ தாக்குற படமா இருக்காது. லைட்டான விஷயங்களை வச்சி 100 சதவீதம் கமர்ஷியல் படமா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also read: பிளாக்ல டிக்கெட் வித்து சிக்கிய நடிகர்… டிக்கெட்டே கிடைக்காமல் திரும்பிய விஜய்…!

கோட் படத்தின் ஆடியோ வெளியீட்டைக்கூட தனது அரசியல் மாநாடு காரணமாக வேணாம் என்று ஒதுக்கி வைத்தவர் தளபதி விஜய். அதனால் அவரது பங்களிப்பு அரசியலிலும் சரியான திட்டமிடலுடன் தான் இருக்கும் என்பது விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.