Connect with us

Cinema News

விக்ரமும், பிரசாந்தும் நெருங்கிய உறவினர்களாம்… மறைக்கப்பட்ட உண்மை.. இத கேளுங்க?

Prasanth Vikram: தமிழ் சினிமாவில் 90ஸ் நாயகர்களின் முக்கிய லிஸ்ட்டில் இருப்பது விக்ரமும், பிரசாந்தும்தான். ஆனால் இவர்கள் நெருங்கிய உறவினர்கள் என்பது பலருக்கு தெரியாத தகவல்தான்.

சமீபத்தில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். அதுகுறித்து அவர் பேட்டி அளித்திருந்த போது பிரசாந்த் மற்றும் தியாகராஜன் குறித்து பேசியது வைரலாக பரவியது. இதுகுறித்து அவர் கூறியது, என் உறவினர்தான். ஆனால் அதுகுறித்து நான் பேச விரும்பவில்லை.

இதையும் படிங்க: ஏன்மா உன் வாய் சும்மா இருந்து இருக்கலாமே? கோட் தங்கச்சியால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு

ஏனெனில் அது சம்மந்தப்பட்ட மற்றவர்களையும் எமோஷனலாக அது பாதிக்கும். மற்றவர்களின் பெர்சனல் சம்மந்தப்பட்ட விஷயம். நான் நடிகனாக போகும் போது அவர்கள் உறவினர் என்று கூறாமல் சொந்த காலில் நின்று கோலிவுட்டுக்குள் வர வேண்டும் என நினைத்தேன்.

கஷ்டம் வரும்போது தான் ஜெயிக்கணும் என்ற ஆசையே வரும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். பின்னர் இதுகுறித்து ஆராய்ந்து பார்க்கும்போது, விக்ரமின் தாய்மாமன்தான் தியாகராஜன் என தெரிகிறது. பிரசாந்தின் தந்தையும், விக்ரமின் தாயும் ஒன்றாக பிறந்தவர்கள்.

இதில் அப்போதுதான் வளர்ந்துவந்த நடிகர் வினோத் தியாகராஜன் தங்கையை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் கில்லியில் திரிஷாவின் தந்தையாக நடித்தார். அந்த திருமணத்தில் தியாகராஜனுக்கு உடன்பாடு இல்லாமல் விக்ரம் குடும்பத்தையே ஒதுக்கி வைத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: எம்ஜிஆர், விஜயகாந்த் செய்யாததை விஜய் செஞ்சிருக்காரு.. ‘கோட்’ படத்தால் புகழ் மேல் புகழ்

பாலாவின் ஆட்டோபயோகிராபியில் கூட விக்ரமுக்கு அடிப்பட்ட போது கஷ்டமா இருக்கா எனக் கேட்டேன். அப்போ அவர், எனக்கு அடிப்பட்டு இருந்த போது என்னுடைய உறவினர். சினிமாவில் இருக்கிறார். இனிமே உனக்கு சினிமாவில் நொண்டி கேரக்டர்தான் கிடைக்கும் என இளக்காரமாக பேசினார். 

பாலா விக்ரம்

அப்போதே இவர்களுக்கு முன் சாதித்து காட்ட வேண்டும் என நினைத்தேன். நீங்களும், சேதுவும் துணையாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். தற்போது ரசிகர்கள் அந்த ஸ்கீரின்ஷாட்டை வெளியிட்டு அப்போ அது தியாகராஜன் தானோ எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விக்ரமின் வீடியோவைக் காண: https://x.com/soloworld_75/status/1832367776930975811

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top