இன்னைக்கு 1000 ரூபா… 56 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் அதிகபட்ச டிக்கெட் விலை…!

Published on: September 9, 2024
MSJ
---Advertisement---

ரஜினி, அஜீத், விஜய் படங்கள் என்றால் டிக்கெட் விலை அதுவும் ரசிகர்கள் காட்சிக்கு கட்டுக்கடங்காமல் விற்பனை ஆகிறது. அந்த வகையில் 1000 ரூபாயாக இருந்தால் கூட அசால்டாக வாங்கி விடுகிறார்கள்.

அந்தக் காலத்துல எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் இவங்களோட படங்கள் ரிலீஸாகும்போது டிக்கெட் விலை என்னவா இருந்துச்சுன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

1968ல் சென்னை சபையர் தியேட்டர்ல அதிகபட்ச டிக்கெட்டோட விலை 2 ரூபாயாக இருந்தது. ஆனா 1973ல் தேவி பாரடைஸ்ல டிக்கெட்டோட விலை 2.25 ரூபாய். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அப்படிப் பார்க்கும்போது 56 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்சினிமாவின் டிக்கெட் விலை 2 ரூபாயாக இருந்ததை நம்மால் பார்க்க முடிகிறது.

பழைய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் தான் எம்ஜிஆரின் ஒளிவிளக்கு, கணவன், கண்ணன் என் காதலன், காதல் வாகனம், குடியிருந்த கோயில், புதிய பூமி, தேர்த்திருவிழா, ரகசிய போலீஸ் 115 ஆகிய சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகின.

அதே போல சிவாஜிக்கு தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை, எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம், ஹரிச்சந்திரா,உயர்ந்த மனிதன், என் தம்பி ஆகிய வெற்றிப்படங்கள் வெளியாகின.

Kudiyiruntha koil
Kudiyiruntha koil

அதே போல ஜெய்சங்கருக்கு சிரித்த முகம், டீச்சரம்மா, பால்மனம், தெய்வீக உறவு, பொம்மலாட்டம், நீலகிரி எக்ஸ்பிரஸ், முத்துச்சிப்பி, ஜீவனாம்சம், நேர்வழி, உயிரா மானமா, சிரித்த முகம், அன்பு வழி ஆகிய படங்கள் வெளியாகின. ஜெமினிகணேசனுக்கு தாமரை நெஞ்சம், பணமா, பாசமா ஆகிய படங்கள் வெளிவந்தன.

அதே போல 1973ம் ஆண்டில் எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன், பட்டிக்காட்டு பொன்னையா ஆகிய படங்கள் வெளியானது. சிவாஜிக்கு எங்கள் தங்க ராஜா, கௌரவம், மனிதரில் மாணிக்கம், ராஜ ராஜ சோழன் உள்பட பல படங்கள் வெளியாகின. ஜெய்சங்கருக்கு வந்தாளே மகராசி, இறைவன் இருக்கின்றான், அம்மன் அருள், தலைப்பிரசவம், தெய்வக்குழந்தைகள் ஆகிய படங்கள் வெளியானது.

Also read: கங்குவா விழாவில் ரஜினி பேசியதைக் கேட்டு மிரண்டு போன பாலிவுட்… நடந்ததைக் கேட்டா அதிருதுல்ல..!

அதே போல ஜெமினிகணேசனுக்கு நல்ல முடிவு, கட்டிலா தொட்டிலா, கங்கா கௌரி, மலைநாட்டு மங்கை படங்கள் வெளியாகின. ஆனாலும் அப்போது 2 ரூபாய் என்பது அதிகபட்ச டிக்கெட் தான். அன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் உள்ள டூரிங் டாக்கீஸில் டிக்கெட் காலணா என்று தான் சொல்வார்கள்.