Connect with us

தமிழ்நாட்டில் இவ்வளவுதானா?!… அதிர்ச்சி கொடுக்கும் கோட் படத்தின் வசூல்!..

latest news

தமிழ்நாட்டில் இவ்வளவுதானா?!… அதிர்ச்சி கொடுக்கும் கோட் படத்தின் வசூல்!..

Goat: வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம்தான் கோட். விஜயின் 68வது திரைப்படம் இது. விரைவில் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ந்தது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். அதோடு, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் என 90’ஸ் குரூப் ரீயூனியன் போல இப்படம் அமைந்துவிட்டது. இதில், விஜயின் மகன் விஜயே வில்லனாகவும் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மீனாக்‌ஷி சவுத்ரியும், ஒரு பாடலுக்கு திரிஷாவும் இருக்க படமோ களை கட்டியது.

இதையும் படிங்க: சினேகா ரோலில் முதலில் செலக்ட் ஆனவர் நயன்! படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

அதேநேரம், இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் மற்ற ரசிகர்கள் வேறு விதமான சொன்னார்கள். படம் ஒருமுறை பார்க்கலாம்.. கதை புரியவில்லை.. படத்தின் நீளம் சோதிக்கிறது.. என என்னன்னவோ சொன்னார்கள்.

அதுதான் இப்போது படத்தின் வசூலை பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே நல்ல வசூலை பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. உலகம் முழுவதும் முதல் நாள் இப்படம் 126 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் இப்போது வரை வசூல் பற்றி எந்த தகவலும் இல்லை.

goat

goat

மேலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, அங்கெல்லாம் வசூல் பெரிதாக இல்லை. ஹிந்தியிலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டில் மட்டுமே இப்படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் 5ம் தேதி வெளியான கோட் படம் 10ம் தேதி வரை தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடியை வசூல் செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது. விஜய் படத்திற்கு இந்த வசூல் குறைவுதான். ஆனாலும், இந்த வார இறுதி விடுமுறை நாட்கள், ஓனம், மிலாடி நபி ஆகியவை வருவதால் இன்னும் 100 கோடியை வசூலிக்கும் என எதிர்பார்க்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.

இதையும் படிங்க: கோட் படத்துல டெலிட்டான அந்த சீன்… இதைப் போயா எடுப்பீங்க… சும்மா மாஸா இருக்கே..!

To Top