நான் பேச்சிலரா இருக்க இதுதான் காரணம்… ஒரு வழியா உண்மையைச் சொன்ன எஸ்.ஜே.சூர்யா

Published on: September 13, 2024
SJSurya
---Advertisement---

நெஞ்சம் மறப்பதில்லை. தமிழ்சினிமாவில் ‘நடிப்பு அரக்கன்’ என்று அழைக்கப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர்  அஜீத்தை வைத்து வாலி படத்தை இயக்கி வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டார். இதுதான் இவருக்கு முதல் படம். அதுவும் மாபெரும் வெற்றியை அடைந்தது. அதற்கு அடுத்ததாக இளையதளபதி விஜய் நடிப்பில் குஷி என்ற படத்தை இயக்கினார்.

இதுவும் மாபெரும் வெற்றி. எதிரும் புதிருமான இரு ஹீரோக்களை வைத்து அதுவும் போட்டியாளர்களான அவர்களை வைத்து 2 சூப்பர்ஹிட்டுகளைக் கொடுத்ததால் தமிழ்சினிமா உலகமே யார் அந்த இயக்குனர் என திரும்பிப் பார்த்தது.

தொடர்ந்து அவரது இயக்கத்தில் வரும் படங்களை சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் உற்று நோக்க ஆரம்பித்தனர். சினிமாவை இயக்குவதோடு நிறுத்தாமல் படத்தில் நடிக்கவும் ஆரம்பித்தார். அவரே நடித்து அவரே இயக்கிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் நியூ, அன்பே ஆருயிரே படங்கள் ஹிட் அடித்தன.

SJS
SJS

நியூட்டனின் மூன்றாம் விதி, நண்பன், மான்ஸ்டர், இறைவி, இசை படங்களும் இவரைக் கவனிக்க வைத்தன. தொடர்ந்து மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ராயன் படங்களில் 2 கே கிட்ஸ்சுக்கும் பிடிக்கும் வகையில் திறமையைக் காட்டினார். இந்தியன் 2 படத்தில் தலையைக் காட்டினார். ஆனால் இந்தியன் 3ல் தான் அவரது கெத்தான நடிப்பைப் பார்க்க முடியுமாம்.

ஆனாலும் நீண்டகாலமாக திருமணமே செய்து கொள்ளாமல் இருக்கிறார். 56 வயது ஆகியும் இன்னும் இளம் வாலிபன் போலவே காட்சி அளிக்கிறார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தான் இவரது சொந்த ஊர். ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற அனைவரின் சந்தேகத்திற்கு இடமான கேள்விக்கு முதன்முதலாக அவரே வாயைத் திறந்து பதில் சொல்லி இருக்கிறார். என்னன்னு பாருங்க.

Also read: ஒருவரியில் கதை சொன்ன லோகேஷ்… நிறுத்துங்க.. ஷாக் கொடுத்த சீனியர் நடிகர்…

சினிமாவுல சந்திக்கிற தோல்விக்கு பயந்துதான் நான் பேச்சிலராவே இருக்கேன். சினிமாதான் வாழ்க்கை. வெற்றியோ தோல்வியோ அது என்னோடவே இருக்கட்டும். இதுவே குடும்பம் இருந்தா நான் அவங்களையும் பார்த்துக்கணும். இப்பவாவது வாயைத் திறந்தாரே என்கிறீர்களா?

நடிப்பிலும், வில்லன் வேடத்திலும் அவரது வித்தியாசமான டயலாக் டெலிவரியையும், பாடி லாங்குவேஜையும் ரசிகர்கள் பெரிதும் ரசிக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் ஹீரோவை விட இவர் தான் தன் நடிப்பால் பெயரைத் தட்டிச் செல்வார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.