Connect with us
biggboss

Cinema News

இருக்கிற பேர கெடுத்துக்க போறாரு! பிக்பாஸ் 8ல் களமிறங்கும் வயசான புராடக்ட்

Biggboss Season 8: எப்படியோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தினை தூண்டி இருக்கிறது. அதற்கு முன்பு வரை கமல் கோட் சூட் அணிந்தவாறு விதவிதமான ப்ரோமோவால் அடுத்தடுத்த சீசன்களில் எப்படி நிகழ்ச்சியை கொண்டு செலுத்தப் போகிறார் என்பதைப் போல நடித்திருப்பார்.

அதேபோல இந்த சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் அந்த ப்ரோமோ மக்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. யாருமே எதிர்பாராத வகையில் வித்தியாசமான முறையில் அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மேலும் செட்டுக்குள்ளேயே நடக்கும் ப்ரோமோ இந்த சீசனுக்காக மட்டும் அவுட்டோர் ஷூட்டில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதையும் படிங்க: இத சொல்லியே வலையில் விழ வைப்பார்! வெளியான வைரமுத்துவின் லீலைகள்

அதுவே ரசிகர்களை மிகவும் ஈர்த்திருக்கிறது. இந்த நிலையில் வழக்கம் போல ப்ரோமோ வெளியானதும் யார் யார் உள்ளே போகிறார்கள் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை ரசிகர்கள் அலசி ஆராய்ந்து விடுவார்கள். அப்படி பல பிரபலங்கள் இந்த தடவை உள்ளே போவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதுவும் விஜய் டிவி ப்ராடக்டுகள் நிறைய உள்ளே செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முந்தைய சீசன்கள் வரை விஜய் டிவி ப்ராடக்டுகளாக கிட்டத்தட்ட ஒரு 4 அல்லது 5 பேர் போவார்கள். ஆனால் இந்த முறை ஒரு 12 பேர் உள்ளே செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய் டிவியில் தொகுப்பாளர், காமெடி நடிகர் என ஒவ்வொரு சீசன்களிலும் களமிறங்குவார்கள்.

இதையும் படிங்க: வேட்டையனில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. சீக்ரெட்டை உடைத்த மஞ்சு வாரியர்… ஜாலி பண்ணும் ரசிகர்கள்

அதைப்போல இந்த முறையும் விஜய் டிவியின் மூத்த காமெடி நடிகர் ராமர் உள்ளே செல்ல இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதை பற்றி அறிந்த ரசிகர்கள் இது ராமருக்கு தேவையா என கமெண்ட் அடித்து வருகின்றனர். இதற்கு முந்தைய சீசனில் அமுதவாணன் கலந்து கொண்டிருப்பார்.

ramar

ramar

அவரைப் பொறுத்த வரைக்கும் காமெடியையும் தாண்டி எல்லா திறமையும் உள்ளவர். அதனால் அவரால் சீசனில் நிலைத்து நிற்க முடிந்தது.. ஆனால் ராமரை பொறுத்த வரைக்கும் காமெடி மட்டுமே அவருக்கு வரும். எப்படி சமாளிக்க போகிறார் என தெரியாது. அவருக்கு ஏற்கனவே நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏகப்பட்ட பேரை சம்பாதித்தவர் அதை பிக் பாஸ் வீட்டிற்குள் போய் கெடுத்து விடப் போகிறாரா என்ற ஒரு கோணத்தில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆத்தாடி…பிபி7 முடிஞ்சும் இந்த டீம் ஏ, டீம் பி அடிச்சிக்கிறத நிறுத்தலையா… இன்னொரு பஞ்சாயத்தா?

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top