எங்க சுத்தினாலும் வந்த இடம் சிறப்பு! ‘தளபதி 69’ டிராவல் கதை தெரியுமா?

Published on: September 16, 2024
thalapathy 69
---Advertisement---

Thalapathy 69: எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு தான் படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை கேவிஎன் புரொடக்சன் தான் தயாரிக்க இருக்கிறது. இதன் மூலம் தமிழில் முதன் முறையாக களம் இறங்குகிறது கேவிஎன் ப்ரொடக்ஷன். இதற்கு முன் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தது தான் இந்த நிறுவனம்.

அதுவும் பெரிய பட்ஜெட் உள்ள திரைப்படங்களை எடுத்து மாபெரும் வெற்றி கொடுத்த நிறுவனம் தான் கேவிஎன் புரொடக்ஷன். இந்த நிலையில் விஜய் வைத்து அவருடைய கடைசி படமான 69 ஆவது படத்தையும் தயாரிக்க இருக்கிறது. படத்தின் போஸ்டர் வெளியாகி ஏகப்பட்ட விமர்சனத்திற்கும் ஆளானது.

இதையும் படிங்க: தொலைஞ்சதெல்லாம் திரும்ப வருது! தனுஷ் உட்பட.. ஹேப்பி மூடில் ஐஸ்வர்யா

தளபதி 69 திரைப்படம் படத்தில் தீப சுடரை ஏந்தியவாறு ஒரு கை மட்டுமே போஸ்டரில் இருந்தது. கூடவே ஒரு வாசகமும் இருந்தன. பார்த்த உடனே இது பக்கா அரசியல் படமாக தான் வரப்போகிறது என தெரிந்துவிட்டது.. வினோத்தும் ஆரம்பத்திலிருந்து விஜய்யை வைத்து படம் எடுத்தால் அது அரசியல் படமாக தான் இருக்கும் என உறுதிப்பட கூடியிருந்தார்.

அதுவும் இந்த போஸ்டர் வெளியானதும் ஏற்கனவே கமலை வைத்து ஒரு படத்தை எடுக்க நினைத்திருந்தார் எச் வினோத். அது சம்பந்தமான போஸ்டரும் வெளியானது. அதிலும் கமல் ஒரு தீபந்தத்தை ஏந்தியவாறு தான் போஸ் கொடுத்திருப்பார். அதனால் கமலுக்கு சொல்லப்பட்ட கதைதான் இந்த 69 ஆவது படம் என்றும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜி, கமலுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் அபிப்ராயம் சொன்ன ரஜினி..! அவருக்கு மட்டும் தமிழா?

ஆனால் உண்மையிலேயே இந்த படத்தின் கதை முதன் முதலில் சொல்லப்பட்டது விஜயிடம்தான். அவர் மெர்சல் படத்தில் நடிக்கும் போதே இந்த படத்தின் கதையை விஜையிடம் சொல்லி இருக்கிறார் எச் வினோத். அப்பொழுதே விஜய் கண்டிப்பாக பண்ணலாம். கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினாராம்.

ஆனால் எச் வினோத் சொன்ன தேதியில் விஜயால் அந்த படத்தை கொடுக்க முடியவில்லை .அதனால் அந்த கதை விஜய் சேதுபதியிடம் சென்று இருக்கிறது. அதன் பிறகு தனுஷிடம் சென்று இருக்கிறது. இவர்களை எல்லாம் தாண்டி தான் கமலை வந்தடைந்து இருக்கிறது. கமலும் கடைசியில் கைவிரித்த நிலையில் மீண்டும் விஜயிடமே வந்து சேர்ந்திருக்கிறது தளபதி 69 திரைப்படம்.

இதையும் படிங்க: தலய பார்ப்பேனு நினைக்கல! அஜித்துடனான மீட்டிங்கை பற்றி கூறிய கவின்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.