Connect with us
ajith

Cinema News

சிறுவனை சரியாக கணித்த அஜித்! உடனே 5 லட்சத்தை கொடுத்து பிரமிக்க வைத்த தல

Ajith: அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அவர் செய்கிற உதவிகள் பற்றி இதுவரை யாருக்குமே தெரியவில்லை. அதனால்தான் அஜித்தை தேவையில்லாமல் வம்பிழுத்தும் வருகிறார்கள். ஒருவர் உதவிகள் செய்கிறார் என்றால் அதை பப்ளிசிட்டி பண்ணால்தான் நிம்மதியாக வாழ முடியம். இல்லாவிட்டால் வார்த்தைகளால் கொன்று விடுவார்கள்.

அதற்கு ஒரு உதாரணம் தான் அஜித். இன்று வரை கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வருகிறவர்களுக்கு இவரின் சொந்தக் காசில் இருந்து பல லட்சங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறது. தன் கண்ணெதிரே யாராவது பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு அவரே இருந்து பண உதவிகளை செய்திருக்கிறார்.

இதையும் படிங்க: விக்ரமுடன் பல கெட்டப்புகளில் நடித்த சசிக்குமார்!.. அட யாருக்கும் தெரியாம போச்சே!…

தன் வீட்டு வேலையாள்களுக்கு சொந்தமாக வீடு கட்டியும் கொடுத்திருக்கிறார் அஜித். இதை அந்த வேலையாட்களே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் அஜித்தை பற்றி ஒரு தகவலை கூறினார். அவர் கூறியதில் இருந்து இப்படியும் ஒரு மனிதரா அஜித் என்று பிரமிக்க வைத்திருக்கிறது.

ஏதோ ஒரு மாநிலத்தில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தாராம் அஜித். அப்போது செட்டில் சாப்பாடு பரிமாறப்பட்டது. அதில் ஒரு சிறுவன் சாப்பாடை பரிமாறிக்கொண்டிருந்தானாம். அஜித் பக்கம் வந்ததும் அந்த சிறுவனின் கை வேறு எங்கேயோ போனதாம். சாப்பாடும் சிதறியதாம்.

இதையும் படிங்க:  மீனாவை அடித்த சிட்டி… கோபி போட்ட சபதம்… ராஜியிடம் சண்டையிட்ட கோமதி!

உடனே அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவனை திட்டியிருக்கிறார்கள். ஆனால் அஜித் அந்த சிறுவனை சரியாக கணித்து அவன் பார்வையில் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என கணித்தாராம். உடனே அவனுடைய நம்பரையும் வாங்கிக் கொண்டு உனக்கு போன் செய்கிறேன் என சொல்லிவிட்டு சென்னை வந்தாராம் அஜித்.

சென்னை வந்ததும் அந்த சிறுவனுக்கு போன் செய்து சென்னை வரவழைத்து 5 லட்சத்தையும் கொடுத்து அந்த சிறுவனின் பார்வையை சரி செய்து அனுப்பி வைத்தாராம் அஜித். உண்மையிலேயே அஜித் கிரேட் தான் என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த ஒரு ஷாம்பூ டப்பாவ ரெடி பண்ணும் வைரமுத்து! சுசித்ரா சொன்னது சரிதான்

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top