Cinema News
கடனை அடைக்க விஜயகாந்த் போட்ட மாஸ்டர் பிளான்…. இப்போ இருந்தா இவ்ளோ சிக்கல் வந்துருக்காதே..!
நடிகர் சங்கக் கடனை அடைத்தவர் விஜயகாந்த். அதுவும் பக்கா பிளான் போட்டு அடைத்தார். அந்த சம்பவம் குறித்தும் தற்போதைய கட்டடம் கட்ட ஏற்படும் சிக்கல் குறித்தும் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மதுரையில மாநாடு நடத்திருப்பாரு. அப்போ கூட்டம் ‘ஜே ஜே’ன்னு இருந்தது.
மாநாடு நடத்துறதுக்கு நான் ஏன் பயப்படணும்னு தைரியமா பேசிருப்பாரு. என் சொந்தப் பணத்தை வீட்டை விட்டு அந்தக் காசுல தான் மாநாட்டை நடத்துறேன்னு சொன்னாரு. நான் யாருக்கிட்டயும் இதுக்காக கை ஏந்தலன்னும் ரொம்ப தைரியமா பேசினாரு.
நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி தேவைப்படுது. கலைநிகழ்ச்சி கண்டிப்பா நடத்தியே ஆகணும்னு நடிகர் கார்த்தி சொல்லிருக்காரு. இன்னைக்கு மக்கள் ரொம்ப தெளிவாகிட்டாங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னா ‘நீங்க கோடி கோடியா சம்பளம் வாங்குறீங்க. உங்களுக்குத் தானே கட்டுறீங்க… அதுல கடை, காம்ப்ளக்ஸ் தியேட்டர் கட்டுங்க. அதுல வர்ற வருமானத்தைப் பிரிச்சி எடுத்துக்கோங்க’ன்னு சொல்றாங்க.
இன்னொரு கேள்வி அவர்கிட்ட கேட்குறாங்க. ஏன் கட்டடம் கட்டுறது ‘டிலே’ ஆகுதுன்னு. அதுக்கு ‘லேபர் சார்ஜ் 32 முதல் 40 பர்சன்ட் ஏறிடுச்சு’ன்னு சொல்றாரு. மேஸ்திரி, பெரியாளு, சித்தாளு கூலியைத் தான் லேபர் சார்ஜ்னு சொல்றாரு.
நீங்க எம்ஜிஆர் காலத்துல கட்டடம் கட்ட ஆரம்பிப்பீங்க. அப்போ இருக்குற சம்பளம் அப்படியே இருக்குமா…? நீங்க அப்படித்தான் வாங்கறீங்களா? பொருள் விலை ஏறிப்போச்சுன்னு கூட சொல்லலாம். எல்லாத் தொழிலுக்கும் நியாயமான கூலி ஏறத்தான் செய்யுது. இன்னும் அப்படி கூலி ஏறாம இருக்குன்னா அது விவசாயிக்குத் தான்.
ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ், கார்த்தி கூட கட்டடத்துக்காக கடன் கொடுத்துருக்காங்க. விஜயும், உதயநிதியும் தான் கட்டடத்துக்கு நிதியாக கொடுத்துருக்காங்க. நடிகர் சங்கக் கட்டடம் கட்டணும்னா எல்லா நடிகர்களும் 10 பர்சன்ட் கட்டட நிதிக்காக தன்னோட சம்பளத்துல இருந்து கொடுக்கணும். இந்த விஷயத்தைக் கொண்டு வராம ஏன் கலைநிகழ்ச்சி நடத்துறீங்க?
இந்த இடத்துல விஜயகாந்த் இருந்தாருன்னா கலைநிகழ்ச்சிக்கு இவ்ளோ விமர்சனம் வருதுன்னா அவரு சொல்ற பதிலே வேற மாதிரி இருக்கும். கட்டடத்துக்கு என்ன செலவு வருதோ நான் ஏத்துக்கறேன். என்னோட 2 சொத்தை நான் வித்துடுறேன்னு துணிச்சலா சொல்லிருப்பாரு.
நடிகர் சங்கக் கடனுக்காக எல்லாரும் தொகையைக் கொடுக்கணும்னு சொல்லும்போது யாரும் முன்வரலை. ‘சரி. ஒரு படம் எடுக்கலாம்’னு சொன்னாரு. ‘இவர்கள் இந்நாட்டு மன்னர்கள்’. சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் இவங்க நாலு பேரும் உச்சநட்சத்திரம். யாரும் சம்பளம் வேணாம்னுட்டாங்க.

இளையராஜாவும் சம்பளம் வாங்கல. படத்தின் இயக்குனர் அமீர்ஜான். கே.பாலசந்தரோட இணை இயக்குனர். முரளியோட முதல் படம் பூவிலங்கை எடுத்தவரே அவர் தான். அவரும் சம்பளம் வாங்கலை. விளம்பரம் வந்தாச்சு. படம் ஆரம்பிக்கவே இல்லை. அறிவிப்போடு நின்று போனது.
ஏன்னு விசாரிக்கும்போது விஜயகாந்தைத் தவிர்த்து மற்ற எல்லாரும் நாங்க என்ன ஓசில படம் பண்ணித் தரணுமான்னு கேட்டாங்களாம். அதுல எடுத்த முடிவு தான் கலைநிகழ்ச்சி. அதுவும் உள்ளூருல நடத்தக்கூடாதுன்னு முடிவு பண்ணி மலேசியா, சிங்கப்பூர் போய் நடத்தி கடனை அடைத்தார்.
இப்போ மறுபடியும் கட்டட நிதி திரட்ட கலைநிகழ்ச்சிக்கு வர்றீங்க. இவங்க எல்லாம் 150 ரூபா கொடுத்துப் படம் பார்க்கலைன்னா உங்களுக்கு ஏது சம்பளம்? எல்லாரும் கட்டத்துக்காக 10 பர்சன்ட் கொடுங்களேன். மலையாளத்துல கூட நடிகர் சங்க தலைவர் திலீப் ஒரு படமே எடுத்தாங்க. எல்லாரும் சம்பளம் வாங்காம நடிச்சாங்க.
அது 20-20 படம் சூப்பர்ஹிட் ஆச்சு. அதுல வந்த வருமானம் தான் அங்க கட்டடம் கட்ட காரணமாச்சு. இந்த இடத்தில் விஜயகாந்த் இருந்து இருந்தால் எப்பவோ கட்டடம் கட்டி முடிச்சிருப்பாங்க. அந்த ஆளுமை இல்லாததுதான் இன்னும் கட்டடம் கட்டி முடிக்காமல் இருக்கக் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.