Connect with us

Cinema News

Vijay TVK vs Ajith: இதுல கூட காப்பிதானா…? விஜயை வச்சு செய்யும் அஜீத் ஃபேன்ஸ்… !

விஜய் சமீபத்தில் கலந்து கொண்ட முதல் மாநில மாநாட்டில் அனல் பறக்கும் பேச்சை அள்ளித் தெளித்திருந்தார். இதை அந்த நேரத்தில் அனைவரும் பாராட்டினாலும் தற்போது ட்ரோலில் சிக்கி வருகிறது. அதெல்லாம் ஸ்கிரிப்ட் ஒர்க் என்றும் அவர் ஏன் ஒரு பிரஸ்மீட்டை வைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் பல அரசியல் கட்சித்தலைவர்களும் அவரை கடுமையாகச் சாடி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் முதலில் தம்பி தம்பி என்று சொல்லிவிட்டு இப்போது கொள்கைன்னு வந்துட்டா அண்ணனாவது, தம்பியாவது? தகப்பனே என்றாலும் எதிர்க்கத் தான் செய்வேன். அந்த வகையில் விஜய் கொள்கை எங்களது கொள்கையுடன் உடன்படவில்லை என்று போட்டுத் தாக்கியுள்ளார்.

தற்போது எக்ஸ் தளத்திலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சிப் பக்கமானது மேகா ஆகாஷோட ஃபேன் பேஜ் தான் என்றும் அதை அப்படியே மாற்றி விட்டனர் என்றும் விளக்கப்படம் போட்டுக் காட்டி வருகின்றனர் அஜீத் ஃபேன்ஸ்.

இவர்கள் மேகா ஆகாஷ் ஜனவரி 4, 2017ல் ‘மேகாநாகாஷ்’ என்ற பெயரில் அந்தப் பக்கத்தை தொடங்கினார் என்றும் அதன்பிறகு ஜனவரி 13, 2017ல் மேகாஆகாஷ் என்று பெயரை மாற்றினார் என்றும் அதன்பிறகு ஜூன் 2, 2022ல் மேகா ஆகாஷ் என்று பெயரை மாற்றியதாகவும், அதன்பிறகு ஜூன் 7, 2022ல் மேகா ஆகாஷ் என்ற பெயராகவும் மாற்றினார்.

அதன்பிறகு அக்டோபர் 27, 2024ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அந்தப் பக்கம் மாற்றப்பட்டுள்ளதாக ஹிஸ்டரி பக்கம் தெரிவிக்கிறது. அந்தப் பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகக் கட்சிக் கொடியுடன் விஜய் ஒரு கையைத் தூக்கிக் காட்டுகிறார்.

அருகில் வட்டத்திற்குள் கட்சிக் கொடியை சுருக்கி வைத்துள்ளார்கள். நாலரை மில்லியன் ஃபாலோயர்கள் இருப்பதாகவும், 1 லட்சத்து 39 ஆயிரம் லைக்குகள் இருப்பதாகவும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தப் போட்டோ இப்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்க்கும் போது அட இதைக்கூட விஜயின் டெக்னிக்கல் டீம் செய்யாதா? இது கூட காப்பி தானா? என்று கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இந்தப் பக்கத்தில் ஹேஷ்டாக்காக விடாமுயற்சி, குட்பேட் அக்லி என்று பெயரும் போடப்பட்டுள்ளது. இதிலிருந்து இது அஜீத் ஃபேன்ஸ் செய்த வேலை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top