சிவகார்த்திகேயனை கட்டித்தழுவி! ‘அமரன்’ படம் பார்த்த மகிழ்ச்சியில் ரஜினி

Published on: November 7, 2024
---Advertisement---

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அமரன் திரைப்படம். இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். அவரின் நடிப்புதான் படத்தை வேறொரு லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் வாழ்நாள் முழுவதும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. படம் பார்த்து வெளியே வரும் போது மனதில் ஒரு பெரிய தாக்கம் இருக்கத்தான் செய்யும். நம் மனதிலும் மேஜர் முகுந்த் குடிபோனார் என்றுதான் சொல்லவேண்டும்.

அந்தளவுக்கு தன் நடிப்பின் மூலம் முகுந்த்வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக சாய்பல்லவி அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கு பதில் வேறு யாரேனும் நடித்திருந்தால் கூட படம் மக்களை கவர்ந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

கடைசி கிளைமாக்ஸில் தன் கணவர் அழக்கூடாது என்று கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப அழுகையை அடக்கி அவர் வெளிப்படுத்திய நடிப்பு இப்போது வரை நம் கண்களில் நிற்கின்றது. இப்படி ராஜ்குமார் பெரியசாமி அமரன் திரைப்படத்தால் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டார்.

எந்தவொரு படம் ரிலீஸானாலும் அதை பார்த்துவிட்டு வாழ்த்துக்களை தெரிவிப்பது ரஜினியின் வழக்கம். ஊரே கொண்டாடும் அமரன் திரைப்படத்தை பார்க்காமலா இருப்பார். அமரன் படத்தை பார்த்த சந்தோஷத்தில் படத்தின் இயக்குனர் மற்றும் சிவகார்த்திகேயனை தன் வீட்டிற்கு அழைத்து அவருடைய வாழ்த்துக்களை மிகுந்த சந்தோஷத்துடன் கூறியிருக்கிறார். அது சம்பந்தமான புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment