Cinema News
தைரியமா வந்தபோதே யோசிச்சு இருக்கணும்… பிளடிபெக்கர் திரை விமர்சனம் இதோ!..
கவின் நடிப்பில் பிளடி பெக்கர் திரைப்படம் இன்று தீபாவளி ரேஸில் வெளியாகி இருக்கிறது.
Bloody beggar: பிச்சைக்காரரான கவின் எதேர்ச்சையாக பெரிய அரண்மனையில் சிக்கிக்கொள்கிறார். திடீரென கிடைத்த யோகம் பெரிய ஆபத்து இருப்பதை தெரிந்து கொள்கிறார்.
பிச்சைக்காரரின் இருண்ட காமெடி உலகமாக அமைந்ததுதான் பிளடி பெக்கர். புனித நீருக்குப் பதிலாக கொலின் ஸ்ப்ரேக்கள், மாரடைப்பால் திருப்பங்கள், மற்றும்அறிவியல் சிகிச்சையால் இறந்தவர்களை எழுப்பும் இடம் என ஏகப்பட்ட சர்ப்ரைஸ் பேக்கேஜ்கள் நிறைந்த படமாகி இருக்கிறது.
ஒரு பிச்சைக்காரன் ஒரு பெரிய, தனிமைப்படுத்தப்பட்ட அரண்மனைக்குள் நுழையும் போதே திகில் தொடங்கி விடுகிறது. உண்மையான பேயும் இருக்க அதற்கு சரியான காரணத்தையும் சொல்லிவிடுகின்றனர். கவின் பிச்சைக்காரராக கலகலப்பாகவும், அப்பாவியாகவும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
அவருக்கு சரியாக ரெடின் கிங்ஸ்லி ஈடுக்கொடுத்து காமெடிகளால் கலகலக்க வைத்துள்ளார். பிச்சைக்காரனான கவின் பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் போது அவருடைய சில பிளாஷ்பேக் காட்சிகளும் மாறி மாறி வந்து போகிறது. சில நேரத்தில் இப்படி அடிக்கடி மாறுவதால் கொஞ்சம் கவனத்தை சிதறடிக்கிறது.
பல முக்கிய கேரக்டர்கள் முடிவில்லாமல் முடிந்து விடுகிறது. கவின் மற்றும் கிங்ஸ்லியின் நடிப்புக்கு சிவபாலன் தீனிப்போட்டு இருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் பல இடங்களில் சொதப்பி இருக்கிறார். குறிப்பாக, அரண்மனையில் சுஜித் சாரங்கின் பிரேம்கள் படத்தின் நகைச்சுவைக்கு பங்களிக்கின்றன.
சில நேரங்களில், வீடியோ கேம் வடிவத்திலும் காட்சிகள் வருகிறது. இது குழப்பமில்லாமல் கொண்டு செல்கிறது. இருப்பினும், நிறைய கேரக்டர்களால் படம் தொய்வை சந்திக்கின்றனர். பார்வையாளரின் கவனம் பல இடங்களில் சிதறி மீண்டும் படத்துடன் ஒன்றுவது கஷ்டமாக தான் அமைந்துள்ளது.
சில இடங்களில் காமெடிகள் சரியாக ஒன்றவிட்டாலும் சிவபாலன் வித்தியாசமான கதையை எடுத்து தேறிவிட்டார்.