ஆர்மில உங்களுக்கு வேலை!. உடனே ஜாயிண்ட் பண்ணுங்க!.. எஸ்.கே-வை நெகிழவைத்த ராணுவ அதிகாரி!…

Published on: November 7, 2024
---Advertisement---

Amaran movie: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். காமெடி கலந்த காதல் கதைகளே தனக்கு செட் ஆகும் என்பதை புரிந்துகொண்டு அந்த ரூட்டில் போனார். சூரியை தன்னுடன் வைத்துகொண்டு அவர் அடித்த லூட்டியை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள்.

அப்படி வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது. திடீரென அவ்வை சண்முகி படத்தில் கமல் செய்தது போல பெண் வேஷமிட்டு ரெமோ படத்தில் நடித்தார். இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

குறுகிய காலகட்டத்தில் பல சீனியர் நடிகர்களை பின்னுக்கு தள்ளி வேகமாக முன்னேறி ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் மாறினார். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பல நடிகர்களையும் பொறாமைப்பட வைத்தது. இதை அஜித்தே சிவகார்த்திகேயனிடம் சொல்லி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் தாக்குதலில் மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதாரஜன் பற்றிய உண்மை கதை இது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் காஷ்மீர் பகுதியில் நடைபெற்றது. முகுத்ந் வரதராஜன் சென்ற இடங்கள், அவரின் திருமண வாழ்க்கை, ராணுவ அதிகாரியாக அவர் எப்படி சிறப்பாக செயல்பட்டார் என எல்லாவற்றையும் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எனவே, அதிக மெனக்கடலோடு இப்படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதுவரை மற்ற படங்களில் நடித்த சிவகார்த்திகேயனை அமரன் படத்தில் பார்க்க முடியாது என்கிறார்கள். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் ‘அமரன் படத்தில் டெல்லியில் ராணுவ அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினோம். நான் நடித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எல்லாம் முகுந்த் வரதராஜனோடு பணி புரிந்தவர்கள். அவரின் மேலதிகாரிகள் பலரும் படம் பார்த்தார்கள். ‘அவர்களுக்கு படம் பிடிக்குமா?’ என பதட்டமாக இருந்தது. அப்போது இரண்டு ராணுவ மூத்த அதிகாரிகள் என்னிடம் வந்து ‘உங்களுக்கு ஒரு சலுகை தருகிறோம். ராணுவத்தில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்’ என்றனர். அப்போதுதான் எனக்கு நிம்மதி ஆனது’ என சொல்லி இருக்கிறார்.

அமரன் திரைப்படம் தீபாவளி விருந்தாக வருகிற 31ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment