Connect with us

Cinema News

நான் கூத்தாடியா…? என்னோட கேரியரின் உச்சத்தில்… தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி!..

விஜய் அரசியலுக்கு வந்த முதல் கன்னி பேச்சு பலரையும் கவர்ந்து இருக்கிறது

Vijay: நடிகர் விஜய் தன்னுடைய முதல் மாநில மாநாட்டில் அவர் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனத்துக்குமே நேருக்கு நேராக பதில் அளித்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.

நான் கட்சியை அறிவித்ததில் இருந்தே என்னை கூத்தாடி விஜய், கூத்தாடி விஜய் என்று சொல்கிறார்கள். நம்ம ஊரில் வாத்தியார் எம்ஜிஆரையும், ஆந்திராவில் வாத்தியார் என் டி ஆரும் கட்சி தொடங்கிய போது அவர்களையும் இப்படித்தான் கூத்தாடி என்றார்கள்.

கூத்தாடி என்றால் கெட்ட வார்த்தையா என்ன? கூத்து இந்த மண்ணின் அடையாளம் தான். நான் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதும் அந்த ஊதியத்தை உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். உங்கள் விஜயாக உங்களை நம்பி வந்திருக்கிறேன்.

இந்தியாவிலேயே இரண்டாவதாக அதிக வரி செலுத்தும் உச்ச நட்சத்திரமாக வெறும் திரைப்படத்தில் மட்டுமே நடித்து விஜய் தற்போது வரை இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top