Connect with us

Cinema News

மாநாட்டில் விஜய் இவ்ளோ நேரமா பேசறாரு? அப்போ தெறிக்க விட்டுருவாரே..!

விஜய் தளபதியாகி விட்டதில் இருந்தே அவருக்கு மாஸ் அதிகரித்து வருகிறது… அரசியலில் எப்படின்னு பார்க்கலாம்…

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி ‘வி’ சாலையில் நடைபெற உள்ளது. மாநாடு மாலை 4 மணி முதல் 10 மணி வரை நடைபெறுமாம். ஆனால் அரசு 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாம்.

மாநாட்டில் ஒரு மணி நேரம் விஜய் பேசப் போகிறாராம். அவருடன் 8 பேர் உரையாற்ற உள்ளார்களாம். முதலில் கட்சிக்கொடியை ஏற்றியதும் அதற்கான விளக்கத்தைப் பற்றிப் பேசுவார் என்றும், கொள்கைகள் பற்றியும் அடுத்தடுத்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாநாட்டுத் திடலைச் சுற்றி 650 அடி நீளம் 50 அடி உயரம் கொண்ட கோட்டை முகப்பு செட் அமைக்கப்பட்டு வருகிறது. இரட்டை யானை படமும் வருகிறது. 1400 கொடிக்கம்பங்கள், 20 ஆயிரம் ஒளி விளக்குகள் என தடபுடலான ஏற்பாடுகள் நடக்கிறது.

பள்ளங்களை சமன் செய்தல், ரேம்ப் வாக்கிற்கான ஏற்பாடுகள் என பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகம், மொபைல் டாய்லெட்டுகள் என பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 4 பார்க்கிங் வசதிகளும் நடந்து வருகிறது. மாநாட்டில் உள்ளே இருப்பவர்களுக்காக எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுக்கான அலுவலகமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு முகப்பில் வாசலின் உயரத்துக்கு விஜயின் படமும் வைக்கப்படும். முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்த்தால் ரொம்ப பிரம்மாண்டமான மாநாடாக இருக்கும் என்றே தெரிகிறது.

மாநாட்டின்போது தான் விஜய் அரசியல் ரீதியான அவரது கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்த எல்லா விஷயங்களையும் பேசுவார் என்பதால் இப்போதே அதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்கும் நேரம் என்பதாலும், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும் போலீசாரின் கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாகவே இருக்கும் என்றும் தெரிகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top