விக்ரம் படத்தில் கொட்டிய கோடிகள்!.. உலகநாயகன் போட்ட பக்கா ஸ்கெட்ச்!…

Published on: November 7, 2024
---Advertisement---

Kamalhassan: கமல்ஹாசன் தன்னுடைய விக்ரம் திரைப்படத்தில் வெற்றியால் நடந்த முக்கிய விஷயம் குறித்து பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கிய இடம் கமல்ஹாசனுக்கு உண்டு. ஆனால் அவருக்கு ஒரு பழக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது. தமிழ் திரையுலகத்திலிருந்து கிடைத்த லாபத்தை வெளியில் எடுத்து செல்ல மாட்டார்.

இங்கு எடுப்பதை இதில் போடுவதுதான் அவருடைய வழக்கம். அந்த வகையில் சமீபத்திய காலமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ச்சியாக திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவர்களுடைய கைவசம் தற்போது ஐந்துக்கும் அதிகமான திரைப்படங்கள் உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப், KH233, KH237, சிலம்பரசன் நடிப்பில் STR48 உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகிறது. பொதுவாக ராஜ்கமல் ஒரே நேரத்தில் இத்தனை படங்களை இயக்குவது வழக்கமில்லை.

இது குறித்து நடிகர் கமலஹாசன் தன்னுடைய அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, பொதுவாக எங்களுடைய நிறுவனத்தில் படங்கள் செய்பவர்கள் என்னுடைய சகோதரர்களாக தான் இருக்க வேண்டும். அவர்களால்தான் என்னை கட்டுப்படுத்த முடியும்.

என்னுடைய ஆர்வத்திற்கும் ஈடு கொடுக்க முடியும். அதை மகேந்திரன் தற்போது சரியாக கையாண்டு வருகிறார். ராஜ்கமல் நிறுவனம் தற்போது 50க்கும் அதிகமான திரைப்படங்களை தயாரித்து விட்டது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

விக்ரம் திரைப்படத்தில் பிடித்த கோடிக்கணக்கான லாபத்தால் தற்போது ஒரே நேரத்தில் விற்பனை திரைப்படங்களை ராஜ்கமல் தயாரித்து வருகிறது. அதுபோல பெரிதில் ரிலீஸ் ஆகும் திரைப்படம் வெற்றி பெற்றால் ராஜ்கமல் நிறுவனம் மேலும் திரைப்படங்களை தயாரிக்க தயாராகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment