Connect with us

Bigg Boss

பிக்பாஸில் இருந்து ஸ்ருதிகா வெளியேற்றப்படுவாரா? இப்படியெல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ்

ஸ்ருதிகாவிற்கு வழுக்கும் ஆதரவு! பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா

ஹிந்தி பிக்பாஸில் முதன் முறையாக தமிழ் போட்டியாளர் ஒருவர் போயிருக்கிறார் என்றால் அது நடிகை ஸ்ருதிகா அர்ஜூன்தான். அவருடைய சின்னக் குழந்தைத்தனமான பேச்சு வேடிக்கையான நடவடிக்கை என அங்கு இருக்கும் அனைவரையும் ஸ்ருதிகா ஆச்சரியப்படுத்தி வருகிறார். ஆனால் புதியதாக பார்க்கும் ரசிகர்களுக்கு ஏன் இவர் இப்படியெல்லாம் பேசுகிறார்? ஓவர் ஆக்டிங் மாதிரி இருக்கே என்றும் விமர்சித்து வருகிறார்.

ஆனால் அவரைப் பற்றி அறிந்தவர்களுக்குத்தான் ஸ்ருதிகாவை பற்றி தெரியும். ஹிந்தியில் முழுவதுமாக பேசாமல் திணறி வருகிறார் ஸ்ருதிகா. அவ்வப்போது தமிழிலும் உரையாடிக் கொண்டு வருகிறார். அங்கு இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் அவ்வப்போது தமிழில் சில வார்த்தைகள் கற்றுக் கொண்டு வருகிறார் ஸ்ருதிகா.

இதனால் பிக்பாஸ் ஸ்ருதிகாவை தமிழில் பேசக் கூடாது என எச்சரித்தும் வருகிறார். இதற்கிடையில் அவருடைய வெகுளித்தனத்தை உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்கள் கிண்டலடித்தும் கேலி செய்தும் சிரித்து வருகின்றனர். ஸ்ருதிகாவை முன்னே விட்டு பின்னாடி அவரை பற்றி பல விஷயங்களை மற்ற போட்டியாளர்கள் பேசி வருகிறார்கள்.

இதை பற்றி ஸ்ருதிகாவே ஃபீல் பண்ணி பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. ஆனால் ஆரம்பம் முதலே சல்மான்கானை சிரிக்க வைத்து வருகிறார் ஸ்ருதிகா. அவருடைய இந்த நடவடிக்கைகள் போலி கிடையாது. ஓவர் ஆக்டிங்கும் கிடையாது. அதனால் சல்மான் கான் இந்த வாரம் இதை பற்றி பிக்பாஸில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவர் தமிழ் பேசுகிறார் என்பதற்காக அவரை கிண்டல் செய்யக் கூடாது. அதனால் இது மேலும் பெரிய பிரச்சினையாக மாறினால் ஸ்ருதிகா கண்டிப்பாக ஹிந்தி பிக்பாஸில் இருந்து வெளியேறி தமிழ் பிக்பாஸுக்கு வரவேண்டும் என இங்கு உள்ள ரசிகர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். இருந்தாலும் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்றால் கண்டிப்பாக ஸ்ருதிகாவிற்கு பெரிய வெற்றிதான் என்றும் கூறுகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Bigg Boss

To Top