Flashback
உலகமகா நடிகருப்பா அவரு… சிவாஜியையே தூக்கி சாப்பிட்டுட்டாரே… யாரைச் சொல்றாரு தயாரிப்பாளர்
இப்படி எல்லாமா பாடா படுத்துனாரு அந்த டைரக்டர்!
அழகி, தென்றல் என அருமையான படங்களைக் கொடுத்தவர் தங்கர் பச்சான். அவர் ஒருமுறை தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவின் தந்தையும் இயக்குனருமான பாஸ்கரிடம் ஒரு விஷயத்தை சொல்கிறார். அதற்கு தந்தை சொன்ன பதில் என்ன என்பதை சுவாரசியம் குறையாமல் சொல்கிறார் பாலாஜி பிரபு. வாங்க பார்க்கலாம்.
தங்கர்பச்சான் ஒரு சிறந்த நடிகர். அவர் தப்பித் தவறி டைரக்டரா வந்துட்டாரு. அவரு முழுநேர நடிகரா வந்துருந்தாருன்னா அவரு ஆஸ்கர்ல இருந்து எல்லா அவார்டையும் வாங்கியிருப்பாரு. அவரு நடிகர் திலகத்தை விட சிறப்பா நடிக்கிறவரு. ஏன்னா அவர் திரையில மட்டுமல்ல. நிஜத்துலயும் நடிக்கிறவரு. இது வெறும் டிரைலர் தான். மெயின் பிக்சர் பார்க்கலாமான்னு பீடிகை போட்டுட்டு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேச ஆரம்பிக்கிறார்.
தங்கர்பச்சான் அப்பாவை ஆபீஸ் வந்து பார்க்கிறார். அப்போது அவர் ‘9 ரூபாய் நோட்டு’ நாவல் என்று ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார். அதைப் படிச்சதும் ரொம்ப பிரமாதமா இருக்குன்னு அப்பா சொன்னாரு. அப்புறம் அவரே ‘சார் இந்த 9 ரூபாய் நோட்டை படமா பண்ணலாம்னு இருக்கேன். இதை உங்க பேனர்ல பண்ண ஆசைப்படறேன்’னாரு.
‘நீங்க தயாரிப்பாளரா இருங்க’ன்னும் சொல்றாரு. அப்பாவும் ‘ஓகே’ சொல்றாரு. சத்யராஜ் ஹீரோ. ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ்ராஜ் எல்லாம் நடிக்கிறாங்க. தங்கர்பச்சானுக்கு 65 லட்சம்னு பேசியாச்சு. 15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தாச்சு.
பூஜைக்கு ஏவிஎம்ல ஏற்பாடு பண்ணியாச்சு. அதுக்காக சின்னதா ஒரு வில்லேஜ் மாதிரி ஆர்ட் டைரக்டரை வச்சி செட் போட்டுட்டாரு. பூஜைலயே சூட்டிங் ஆரம்பிச்சிட்டாரு. எல்லாமே பழங்கால பாரம்பரிய உணவுகள். கூழ், கருவாடு, மோர் மிளகாய் தொக்குன்னு வச்சிட்டாரு.
மறுநாள் ஆர்ட் டைரக்டர் வந்தாரு. நேற்று பூஜையோட பில் வந்தது. அப்பாக்கிட்ட ரெண்டரை லட்சம்னு அதுல போட்டுருந்தது. என்னன்னு விவரம் கேட்டா அவரு சொன்னதைக் கேட்டு அப்பா அசந்துட்டாரு. அப்புறம் அதை பெரிசா எடுத்துக்காதீங்க. பார்க்கலாம்னு சொன்னேன். அப்பாவும் விட்டுட்டாரு. தனியா ஒரு ரூம் கேட்டாரு. பீச்ல டிஸ்கஷன் பண்ணனும்னு சொன்னாரு.
அப்புறம் கதை எந்த லெவல்ல போய்க்கிட்டு இருக்குன்னு பார்த்தா அங்க கிளிக்குக் கொய்யாப்பழம் ஊட்டிக்கிட்டு இருந்தாரு. இன்னும் 20 நாள் டிஸ்கஷன் நடக்கும்னு சொன்னாரு. கிளிக்குக் கொய்யாப்பழம் ஊட்டுனதுக்கு பைவ் ஸ்டார் ஓட்டல்ல பில் 10ஆயிரத்து சில்லரை போட்டுருந்தது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு அப்பாகிட்ட சொன்னாரு.
அப்பா போனாரு. பக்கத்துல ஒரு சுடுகாடு இருக்கு. எப்பவும் சங்கு சத்தமா கேட்குது. நைட்ல எரிஞ்சிக்கிட்டு இருக்கற பொணம் என் தலை பக்கத்துல ஆடுற மாதிரியே இருக்குன்னாரு. எனக்கு வேற ஒரு ரிசார்ட்ல ரூம் போட்டுக்கொடுங்கன்னாரு. உடனே அதைப் பத்தி பேசுவோம்.
ஆபீஸ் வாங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. இப்போ 40 லட்சம் போயிருக்கு. இதுக்கு மேல நாம தொடர்ந்தா நாலஞ்சு கோடி லாஸ் ஆகிடும்னாரு. அதனால இதை டிராப் பண்ணிடலாம்னு நினைச்சி அதை தங்கர்பச்சானிடம் சொன்னாரு. ‘என்ன சார் சொல்றீங்க. என்னோட கனவுப்படம் சார். ஐயய்யோ’ன்னாரு. ‘இது மாதிரி மத்தவங்க என்னைப் பார்த்து சொல்லிடக்கூடாது’ன்னு சொல்லிட்டாரு.
அப்புறம் தங்கர்பச்சான் மூடு அவுட்டாகிட்டாரு. ‘சரி சார். நான் உங்களுக்கு 80 லட்சத்துல ஒரு படம் எடுத்துத் தர்றேன்’னாரு. ‘யாரு நடிக்கிறது’ன்னு கேட்டாரு. ‘நானே நடிக்கிறேன்’னு சொன்னாரு. ‘என்ன படம்’னு கேட்டார். ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ன்னாரு. கைய எடுத்துக் கும்பிட்டு ‘ஆள விடுறா சாமி’ன்னாரு அப்பா. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.