Connect with us

Flashback

எம்ஜிஆரிடமே வாக்குவாதம் செய்த கவிஞர்… அதிர்ந்து போன புரட்சித்தலைவர்! அடுத்து நடந்த அதிசயம்!

நீயா, நானா போட்டி அப்பவே… அதுவும் எம்ஜிஆர்கிட்டேயே மோதினாருன்னா எவ்ளோ தில்லு வேணும்?

1500க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 15வது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். 1973ல் திரைப்படங்களில் பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இளையராஜா, எம்எஸ்வி. போன்ற இசை மேதைகளால் பாராட்டப்பட்டவர். சிவகங்கை மாவட்த்தைச் சேர்ந்தவர்.

காக்கிச்சட்டை படத்தில் கமல், அம்பிகாவின் சூப்பர்ஹிட் பாடலான ‘பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக் கொள்ளும்’ என்ற பாடலை எழுதியவர் இவர் தான். கவிஞர் முத்துலிங்கம் எம்ஜிஆரின் ரசிகன். இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் எழுதிய முதல் பாடல் பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் வரும் ‘தஞ்சாவூரு’ பாடல். ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைத்தார். அவர் எழுதிய முதல் பாடலே ஹிட் அடித்தது.

இந்தப் படத்தின் இயக்குனர் மாதவன். இவர் எம்ஜிஆரிடம் இந்த செய்தியைக் கொண்டு செல்கிறார். அவர் தான் நடிக்கும் 4 படங்களுக்கு அவரையே பாடல் எழுதச் சொல்கிறார். உழைக்கும் கரங்கள் படத்திற்கு பாடல் எழுதினார். இதற்கு முன்பு ஊருக்கு உழைப்பவன் படத்தில் பாடல் எழுதினார். பிள்ளைத் தமிழ் பாடுகிறேன் என்று கே.ஜே.யேசுதாஸ் பாடினார்.

அதன் பிறகு மீனவ நண்பன் படத்தில் தங்கத்தில் முகமெடுத்து பாடலை எழுதினார். இதையும் யேசுதாஸ் தான் பாடினார். எல்லாமே எம்எஸ்வி. தான் இசை. இன்று போல் என்றும் வாழ்க படத்திலும் 2 பாடல்களை எழுதுகிறார். அன்புக்கு நான் அடிமை என்ற பாடல், இது நாட்டைக் காக்கும் கை என்ற பாடல்கள் தான் அவை. இந்த 2 பாடல்களும் எம்ஜிஆருக்குப் பிற்காலத்தில் அரசியல் பிரவேசத்துக்குப் பயன்பட்டன.

அதனால் பலவிதங்களில் அவரைக் கௌரவப்படுத்தினார் எம்ஜிஆர். அவர் பதவிக்கு வந்ததும் அரசவைக் கவிஞர் ஆக்கினார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் இவர் எழுதிய பாடலும் இடம்பெற்றது. அது ‘தாயகத்தின் சுதந்திரமே’ என்ற பாடல். இது எம்ஜிஆரின் கொள்கைப் பாடல் ஆனது. இதுதான் அவரது கடைசி படமும் கூட. படத்தை இயக்கியவரும் அவர்தான்.

இந்தப் பாடலில் ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்று ஒரு வரி வரும். அதற்கு எம்ஜிஆர் இந்த வரியில் ஒரு அகம்பாவம் தெரிகிறது. மாற்றி விடுங்கள் என்றார். ஆனால், கவிஞரோ நேராக சென்சார் போர்டிடம் சென்று இதில் தவறு ஏதும் இல்லையே என அவர்களிடம் உறுதி செய்தபின் எம்ஜிஆரிடம் சொன்னார். அதனால் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

google news
Continue Reading

More in Flashback

To Top