Cinema News
Amaran: ரியல் முகுந்தனின் சம்பளமோ வெறும் ஐம்பதாயிரம் ரூபாய்!.. ரீல் முகுந்தனின் சம்பளம் இப்போ எவ்வளவு தெரியுமா?
Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்க இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்தது.
தீபாவளி ரிலீஸ் ஆக வெளியான இந்த அமரன் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதைகளை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் மூலம் இன்று அனைவருமே மேஜர் முகர்ந்த் வரதராஜனை கொண்டாடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: Samantha: லிப்லாக் சீனில் சம்பவம் செஞ்ச சமந்தா… OTT-யில் பட்டையைக் கிளப்பும் சிட்டாடல்..!
அதுவரை ஒரு ராணுவ வீரர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார் என்பதை மட்டுமே நினைத்திருந்த மக்களுக்கு அவர் எப்படி எல்லாம் போராடி இந்த நாட்டை காப்பாற்றினார்? தீவிரவாதிகளிடமிருந்து எந்த அளவு போராடி உயிர் தியாகம் செய்தார் என்பதை இந்த படத்தின் மூலம் தத்துரூபமாக காட்டி இருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
இந்த படம் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பார்த்த மக்கள் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று பார்க்காமல் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே இந்த படத்தை பார்த்தனர். அந்த அளவுக்கு மேஜர் முகுந்த் வரதராஜனாகவே இந்த படத்தில் வாழ்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.
படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் நூறு கோடிக்கும் மேலாக வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு ஹீரோ படம் மாபெரும் வெற்றி அடைந்தாலும் அடுத்த கட்ட நிகழ்வு என்னவென்றால் அந்த படத்தில் நடித்த ஹீரோவின் சம்பளம் உயர்வதுதான்.
அதைப்போல சிவகார்த்திகேயனின் சம்பளமும் அவருடைய அடுத்த படத்தில் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதற்கு அடுத்தபடியாக பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிபிச் சக்கரவர்த்தியுடன் படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு 35 கோடி சம்பளம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு வேளை அமரன் திரைப்படம் வசூலில் இன்னும் சாதனை படைக்கும் பட்சத்தில் அதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் ஷேர் வரும் பட்சத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளம் 50லிருந்து 55 கோடியாக உயரும் என்று சொல்லப்படுகிறது.
இதில் இன்னொரு வருத்தம் என்னவென்றால் அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் சம்பளம் பற்றி குறிப்பிட்டு இருப்பார்கள். அதில் அவருடைய சம்பளம் வெறும் 50,000 ரூபாய் என்றுதான் இருக்கும். அதை பார்த்த அனைவரும் இந்த நாட்டை காக்க எல்லையில் போராடும் ஒரு வீரனின் சம்பளம் வெறும் 50 ஆயிரம் ரூபாய் தானா? என்று அனைவரும் ஆதங்கப்பட்டு பேசியிருந்ததையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தால் சூர்யா 45-க்கு வந்த பிரச்சனை!.. இதுதான் காரணமா?…