
Cinema News
TVK Vijay: ‘யாரை கேட்டுடா நாயே உள்ளே வந்த’… தவெக மாநாட்டால் டிரைவருக்கு நடந்த கொடுமை!
TVK Vijay: தமிழ்நாடு அரசியலில் அடுத்த மாற்று கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியை உருவாக்கி இருக்கும் விஜய் கடந்த அக்டோபர் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தினார்.
மாநாட்டின் போதே சாப்பாடு, தண்ணீர் மிச்சமாகி தங்களுக்கு கெட்ட பெயர் எதுவும் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் அங்கு குவிந்த தொண்டர்களுக்கு சாப்பாடு, தண்ணீர் இரண்டும் வழங்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கழிவறை தண்ணீரை குடித்து மாநாட்டில் உயிர் பிழைத்தனர்.
இதையும் படிங்க:Vijayakanth: எதிர்பார்க்கவே இல்ல! இவ்ளோ பணம் கொடுப்பாருனு.. விஜயகாந்த் பற்றி சிலாகித்து பேசிய நடிகை
இந்தநிலையில் மாநாட்டிற்கு கார் ஓட்டிய டிரைவர் தன்னுடைய சம்பள பணத்தினை கேட்டதற்கு தவெக நிர்வாகி அவரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தது தெரிய வந்துள்ளது. குடிபோதையில் இருந்தவர்களை மாநாட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் கொண்டு வந்து சேர்த்த டிரைவர், சம்பள பணத்தை கேட்டதற்கு துணை செயலாளர் மோகன் ‘உன்னால் என்ன முடியுமோ செய்துகொள்?’ என்று பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம்.
டிரைவர் கட்சி நிர்வாகியின் ஆபிஸ் சென்று பார்த்தபோது, ‘யாரை கேட்டுடா நாயே உள்ளே வந்த’ என்றும் திட்டி இருக்கின்றனர். இதையடுத்து அந்த டிரைவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சம்பள பணத்தை பெற்றுக் கொடுக்கும்படி புகார் அளித்திருக்கிறார்.

#image_title
இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘ஒரு மாநாட்டிற்கே இந்த நிலைமையா? மொதல்ல இந்த மாதிரி இல்லாதவங்க கிட்ட மோசமா நடந்துகிறத நிறுத்துங்க’ என கொந்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநாட்டிற்கு வண்டி ஓட்டிய டிரைவரின் புகார் கடிதம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.