Idly Kadai: பக்கா பிளானிங்.. ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் செய்தியை வெளியிட்ட தனுஷ்

Published on: November 8, 2024
dhanush
---Advertisement---

Idly Kadai: திருச்சிற்றம்பலம் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷும் நித்யா மேனனும் இணையும் திரைப்படம் இட்லி கடை. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷும் நித்யா மேனனும் இணைந்து அபார நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றனர். இந்த நிலையில் மீண்டும் தனுஷுடன் நித்யா மேனன் இட்லி கடை படத்தில் இணைந்திருக்கிறார்.

இது தனுஷுக்கு 52 வது படம். அதோடு அவர் இயக்கும் நான்காவது படமாகவும் இட்லி கடை திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த படத்தை தனுஷின் வுண்டார்பார் ஃபிலிம்ஸுடன் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறார்கள். படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் இன்று வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: SK: தனுஷ் சாருக்கு ரொம்ப நன்றி!… அமரன் வெற்றி நிகழ்ச்சியில் புகழ்ந்த SK… இத நம்பலாமா?!…

ஏப்ரல் மாதம் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ். அதிலிருந்து தமிழ் வருடப்பிறப்பு விடுமுறையும் சேர்ந்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் பக்கா பிளானோடு இந்த தேதியை அறிவித்திருக்கிறார் தனுஷ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் இணைந்து நடித்திருந்தார்கள்.

இவர்களுடன் இணைந்து பாரதிராஜா, ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகை என்ற தேசிய விருதை பெற்றார் நித்யா மேனன். கடந்த செப்டம்பர் மாதம் இட்லி கடை படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

போட்ட முதலயே எடுக்க திணறும் பெக்கர் பிரதர்!… சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் லக்கி பாஸ்கர்!..இதையும் படிங்க:

இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படமாகும். இதில் அனிகா சுரேந்தர் லீடு ரோலில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவின் இயக்கத்திலும் குபேரா என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவருடன் இணைந்து நாகர்ஜுனாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

dhanush
dhanush

இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இது அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும். இந்த நிலையில் தான் இட்லி கடை படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிக அளவில் திரும்பி இருக்கிறது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.