Cinema News
Vijayasanthi: அடி வாங்கி தான் சூப்பர் ஸ்டார் ஆனேன்.. நீண்ட நாளுக்கு பிறகு விஜயசாந்தி கொடுத்த பேட்டி
Vijayasanthi: இன்று நாம் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை கொண்டாடி வருகிறோம். ஆனால் முதன் முதலில் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆக தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும் ஸ்டைலான நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை விஜயசாந்தி.
ஆக்சன் படங்களுக்கு பேர் போனவர் .ஆக்சன் படங்களில் ஹீரோ மட்டும்தான் நடிக்க முடியும் என்ற வரைமுறையை மாற்றியவர். பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களில் மிகவும் கெத்தாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் ஆழமாக குடிபோனார் .
இதையும் படிங்க: Surya: அதே ஸ்டேஷன்ல காத்திருக்கேன்!.. ராஜமவுலிக்கிட்ட துண்டு போட்டு வச்ச சூர்யா!… ஓவர் பீலிங்கா இருக்கே?!…
முதன் முதலில் பாரதிராஜாவால் கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். இவருடைய புகைப்படத்தை பார்த்த பாரதிராஜா கல்லுக்குள் ஈரம் படத்திற்கு ஒரு புதுமுக நடிகை தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இவர் புகைப்படத்தை பார்த்ததும் அழகாக இருக்கிறார் என விஜயசாந்தியின் அப்பாவிடம் போய் கேட்டிருக்கிறார்.
அவரும் ஓகே சொல்ல 13 வயதில் இந்த படத்தில் நடித்தாராம் விஜயசாந்தி .அப்போது நடிப்பு என்றாலே என்ன என்பது தெரியாத வயது. அதனால் நடிக்கும்போது கொஞ்சம் திணறியதாக கூறினார். அது மட்டுமல்ல அந்த படத்தில் வேறு யாரோ செய்த தவறுக்காக பாரதிராஜா என்னை அடித்துவிட்டார் .
இதையும் படிங்க: 40 நாள் முன்னாடியே திட்டமிட்டு இருந்தா ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அறிவிக்காதது ஏன்?.. பாவம் லோகி!..
அதனால் நான் கோபித்துக் கொண்டு இனிமேல் நான் நடிக்கவே மாட்டேன் என அழுது கொண்டே வந்து விட்டாராம். அதன் பிறகு அந்த படத்தின் கேமராமேன் ஒருவர் விஜயசாந்தியை சமாதானப்படுத்தி மீண்டும் அந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
அதன் பிறகு பாரதிராஜாவும் இவருக்கு சமாதானம் சொல்ல தொடர்ந்து இந்த படத்தில் நடித்ததாக விஜயசாந்தி கூறினார். அப்படி அடி வாங்கியதால் தான் இன்று ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறேன். அது மட்டுமல்ல சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் ரஜினி கமல் கூட அடி வாங்கித்தான் நடித்திருக்கிறார்கள் என விஜயசாந்தி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
எண்பதுகளுக்கு பிறகு தமிழில் அவரை பார்க்கவே முடியவில்லை. தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையாக மாறினார். ஒரு வருடத்திற்கு 17 படங்கள் வீதம் தொடர்ந்து நடித்து வந்தார் விஜயசாந்தி. கிட்டத்தட்ட 190 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறாராம். தமிழில் ஏன் வாய்ப்புகள் வரவே இல்லை என்று தெரியவில்லை.
தெலுங்கில் பிசியானதால் தமிழில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் எனk கூறி இருக்கிறார் விஜயசாந்தி.