BiggBoss Tamil
Biggboss Tamil 8: ‘காதல்ல இருக்கேன்’ வெளில போனதும் கல்யாணம்தான்!.. அருண் சொல்லிட்டார்!..
Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் தற்போது ஓரளவு உருப்படியாக சென்ற டாஸ்க் என கடந்து வந்த பாதை நிகழ்ச்சியை சொல்லலாம். இதில் போட்டியாளர்களின் பல்வேறு முகங்கள், தருணங்கள், பாசங்கள் வெளிப்பட்டன. குறிப்பாக சத்யா, தர்ஷினி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகியோரின் வாழ்க்கை குறித்த நிகழ்வுகள் நெஞ்சை தொட்டன.
‘சம்மந்தி’ செய்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரச்சினைக்கு ஆளான அன்ஷிதா தன்னுடைய இளமைக் காலத்தில் தனக்கு பல நேரங்களில் உணவாக சம்மந்தி தான் இருந்தது என்பதை சொன்ன தருணம் நெகிழ்வாக இருந்தது. இந்தநிலையில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்த காதல் விவகாரத்தை பொதுவெளியில் அருண் போட்டு உடைத்திருக்கிறார்.
கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்து இறுதியில் கப்பையும் தட்டிச்சென்ற அர்ச்சனா – அருண் இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இதுவரை இதற்கு எந்தவொரு விளக்கமும் அளித்ததில்லை.
தற்போது அருண் போட்டியாளர்கள் முன்னிலையில் ஓபனாக காதலை தெரிவித்து உள்ளார். பெயரை சொல்லாமல், ‘இப்போ ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கேன். பிக்பாஸ் வீட்ல இருந்து வெளில போனதும் ஒரு நல்ல நிகழ்ச்சி நடக்கும். கண்டிப்பா உங்க எல்லாரையும் கூப்புவேன். அவசியம் வரணும்’, என வெட்கத்துடன் அர்ச்சனா பெயரை குறிப்பிடாமல் சொன்னார்.
இதைப்பார்த்த போட்டியாளர்கள் அவரை கிண்டல் செய்து உண்டு இல்லை என்று ஆக்கி விட்டனர். அருணின் காதலுக்கு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் திருமணம் முடிப்பது சமீபத்திய ட்ரெண்டீ ஆக உள்ளது. இந்த லிஸ்டில் அருணும் விரைவில் இணைய வாழ்த்துகள்!..இ
இதையும் படிங்க: PradeepAntony: ஓவர் குசும்பு தான்!… திருமணம் முடிந்த கையோட பிரதீப் ஆண்டனி செஞ்ச வேலை… செம வைரல்!…