Cinema News
போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? அமரன் படக்குழுவிற்கு சரமாரியாய் கேள்வி கேட்கும் பிரபலம்
உலகநாயகன் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த படம் அமரன். தற்போது படம் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்தப் படத்தில் ராணுவத்தைப் பற்றியும், காஷ்மீர் மக்களைப் பற்றியும் எடுத்துள்ளார்கள்.
இது பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது. இதுதவிர சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் குறியீடு பற்றித் தெளிவாகக் காட்டவில்லை என்றும் பேசப்பட்டது. இதற்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார்.
Also read: தக் லைஃப்ல கமல் செய்த மேஜிக்… விஸ்வரூபமா, குருதிப்புனலா? இப்படி தெறிக்க விடுறாரே!
அடுத்ததாக எஸ்டிபிஐ கட்சியினர் படத்தில் காஷ்மீர் இஸ்லாமியருக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது என கோவை சாந்தி திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தினர்.
படம் வெளியாகியுள்ள தியேட்டருக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. இப்படி பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்தபோதும் படத்தின் மீது ரசிகர்களின் வரவேற்பு சிறிதும் குறையவில்லை. மாறாக அதிகளவில் படம் பார்க்க செல்கின்றனர். இந்தப் போராட்டங்களே படத்துக்குக் கூடுதல் புரொமோஷனாக அமைந்து வருகிறது.
இன்னும் படமே பார்க்காதவர்கள் அந்தப் படத்தில் என்னதான் உள்ளது என்று பார்க்க வருகிறார்கள். படத்தைப் பார்த்தவர்களோ மீண்டும் மீண்டும் அதைப் பார்க்க வருகிறார்கள். அந்தவகையில் படத்தைப் பற்றி இப்போது ஒரு பிரபலம் கடுமையாகச் சாடி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
திருமுருகன் காந்தி மனித உரிமை ஆர்வலர். தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைப் பற்றி ஐ.நா.சபையில் பேசியவர் இவர். தற்போது அமரன் படத்திற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் கேட்கும் கேள்விகள் சரமாரியாக உள்ளன. என்ன சொல்றாருன்னு பாருங்க.
அமரன் படத்தில் ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களையும் ஜனநாயகத்திற்காகப் போராடிய தலைவரையும் எதிரிகளாக நிறுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது. தேசிய இனத்தின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது போல இருக்கிறது. அதே போல முகுந்த் சண்டைக்குப் போகும் முன்பெல்லாம் ‘ஜெய் பஜ்ரங் பலி’ன்னு முழக்கம் இடுகிறார். இந்திய ராணுவத்தில் அதுபோல எங்கே முழக்கம் இடுகிறார்கள்? என்கிறார் அவர்.