Biggboss Tamil: பிக்பாஸ் சீசனில் எது மாறுகிறதோ இல்லையோ முந்தைய சீசன்களில் போட்டியாளர்களுக்கு கிடைத்த பட்ட பெயர்கள் மட்டும் மாறுவதில்லை. அதோடு அதே பட்ட பெயர்கள் புதிதாக வந்தவர்களுக்கும் தொடர்வது தான் இதில் சிறந்த காமெடி.
குறிப்பாக மருத்துவ முத்தம், குறும்படம், வெஷ பாட்டில் போன்ற வார்த்தைகள் இன்னும் பிக்பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்தவகையில் இந்த சீஸனின் வெஷ பாட்டில் யார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலும் ரசிகர்கள் குழம்பி விடுவார்கள் என்பதால், தேர்வு செய்யும் ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: என்னடா நடக்குது இங்க!.. மழையில் ஆட்டம் போடும் காதல் பறவைகள்.. வீடியோ பாருங்க!..
சவுந்தர்யா, முத்துக்குமரன், சாச்சனா, அருண், ஆர்ஜே ஆனந்தி ஆகிய ஐவரில் இருந்து பார்வையாளர்கள் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் அருண், ஆனந்தி, சவுந்தர்யாவை தேர்வு செய்துள்ளனர்.
சாச்சனா சிறுமி என்பதால் அவர் தப்பித்து விட்டார். முத்துக்குமரன் சுபாவமே அப்படித்தான். அதோடு பிக்பாஸ் வீட்டில் ஓரளவு நல்ல போட்டியாளரும் அவரே. எனவே தான் இந்த லிஸ்டில் பெயர் வந்தாலும் மக்கள் அவரை தேர்வு செய்யவில்லை. மாறாக அருண்-ஆனந்தி இருவருக்கும் இந்த வெஷ பாட்டில் டைட்டிலை கைப்பற்றுவது யார் என்பதில் கடும்போட்டியே உண்டாகி இருக்கிறது.

கடந்த சீசன் வெற்றியாளர் அர்ச்சனாவின் காதலராக இருக்கும் அருண் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு அர்ச்சனா தான் முக்கிய காரணம். ஆனால் அதற்கு ஏற்றாற்போல அருண் இன்னும் அடித்து ஆடவில்லை. இதனால் அர்ச்சனா ரசிகர்களும் டயர்ட் ஆகி அவர்கிட்ட யாராச்சும் எடுத்து சொல்லுங்களேன் மோடுக்கு சென்று விட்டனர்.
இதையும் படிங்க: Ajithkumar: ‘தம்பி அஜித்’ வாண்டட் ஆக புகழ்ந்த சத்யராஜ்… கடுப்பில் விஜய் ரசிகர்கள்!





