Cinema News
Sivakarthikeyan: அடுத்த விஜய்?!. நான் நேத்து வந்தவன்!. அது ரொம்ப ஸ்பெஷல்!.. ஃபீல் ஆகும் எஸ்.கே…
கோலிவுட் நடிகர்கள்: சினிமாவில் ஒரு நடிகருக்கான பேர், புகழ் என்பது ஒரு படத்திலேயே கூட கிடைத்துவிடும். ஆனால், அதை பல வருடங்கள் தக்க வைப்பது என்பது அந்த நடிகரின் கையில்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோர் பெற்ற புகழ்கள் ஒரு நாளில் வந்தது இல்லை.
ரஜினி கமல்: கமலுக்கு பின் 65 வருட உழைப்பும், ரஜினியின் வெற்றிக்கு பின் 50 வருட உழைப்பும் இருக்கிறது. சினிமாவில் வெற்றி பெறுவதை விட அதை தக்க வைப்பது மிகவும் கடினம். அதற்காக ஒரு நடிகர் உழைத்துகொண்டே இருக்க வேண்டும். மக்களுக்கு என்ன பிடிக்கும்?.. இந்த கதையில் நாம் நடித்தால் சரியாக இருக்குமா?.. நமது ரசிகர்ளுக்கு இது பிடிக்குமா?.. இந்த கதை வெற்றி பெறுமா?. இந்த இயக்குனர் சரியாக படம் எடுப்பாரா? என எல்லாவற்றையும் யோசித்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்.
ரஜினியெல்லாம் 40 வருடங்களாக சூப்பர்ஸ்டாராகவும், நம்பர் ஒன் இடத்திலும் இருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் உழைப்பும், சிந்தனையும் இருக்கிறது. அதேபோல், நடிகர் விஜய்க்கு இப்போது ரசிகர்களிடம் இருக்கும் புகழுக்கு காரணம் அவரின் 30 வருட உழைப்புதான்.
விஜயின் உழைப்பு: பல தோல்விகளை தாண்டி மேலே வந்தவர்தான் விஜய். தற்போது அரசியலுக்கு போய்விட்டார். அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதே தனது கடைசிப்படம் எனவும் அறிவித்திருக்கிறார். தமிழ் சினிமா நடிகர்களை பொறுத்தவரை விஜய்க்குதான் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பும் இருக்கிறது. அதனால்தான் அவர் 200 கோடி சம்பளமாக கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
விஜய் அரசியல்: தற்போது அவர் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘விஜயின் இடத்தை யார் பிடிப்பார்?’ என்கிற கேள்வி திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்திருக்கிறது. அதில் பலரும் ‘சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிப்பார்’ என்றார்கள்.
கோட் படத்தின் இறுதி காட்சியில் விஜய் தனது துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல ஒரு காட்சி வரும். அதோடு, ‘நீங்க ஏதோ முக்கியமான வேலையா போறீங்க.. நீங்க போங்க இத நான் பாத்துக்குறேன்’ என சிவகார்த்திகேயன் வசனம் பேசுவார். எனவே, விஜயே தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டது போல் இருந்தது அந்த காட்சி.
இதையும் படிங்க: SK: தனுஷ விடுங்க நம்ம சிவகார்த்திகேயனை பாருங்க!… கைவசம் இத்தனை படங்களை வச்சிருக்காரா?!…
சிவகார்த்திகேயன்: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.கே ‘விஜய் சாரின் இடத்தை அவரிடமிருந்து யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. 30 வருடங்களுக்கும் மேல் கடினமாக உழைத்து அந்த இடத்தை உருவாக்கியிருக்கிறார். நேற்று வந்த நான் அதை எடுத்துக் கொள்ள முடியாது.
The Greatest of all time: கோட் படத்தில் வந்த அந்த சீன் அழகான ஒன்று. ஒரு பெரிய ஸ்டார் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகருடன் தனது திரையை பகிர்ந்து கொள்வதாக மட்டுமே அதை பார்க்கிறேன். 12 வருடங்களுக்கு முன்பு துப்பாக்கி படத்தை பற்றி டிவிட் போட்ட நான் அவருடன் இணைந்து நடித்தது மிகவும் ஸ்பெஷலான உணர்வு’ என சொல்லி இருக்கிறார்.