பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 35 நாட்களை கடந்து ஓரளவு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் தீபாவளியை முன்னிட்டு போட்டியாளர்கள் யாரையும் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பவில்லை. இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுப்பலாம் என கூறப்பட்டது.
Also read: Vidamuarchi: விடாமுயற்சி படம் இவ்வளவு லேட்டானதுக்கு இதுதான் காரணமா?!… பிரபலம் சொன்ன சுவாரஸ்யம்!…
பிக்பாஸ் வீட்டில் இந்தமுறை ஓபனாக நாமினேஷன் நடைபெற்றது. இதில் அருண் பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா, முத்துக்குமரன் ஆகிய 11 பேரும் நாமினேட் செய்யப்பட்டனர்.
சிவகுமார், மஞ்சரி, ராணவ், ரியா, வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய 6 பேரும் வைல்டு கார்டில் உள்ளே வந்திருப்பதால், இந்த வாரம் அவர்களை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் அறிவித்து விட்டார். எனவே அவர்கள் 6 பேரும் லிஸ்டில் இருந்து தப்பித்து விட்டனர்.

இந்தநிலையில் வாக்குகள் அடிப்படையில் சாச்சனா இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சுனிதா, ஆர்ஜே அனந்தி, சாச்சனா மூவரில் ஒருவர் எலிமினேட் ஆகலாம் என கூறப்பட்ட நிலையில் தன்னுடைய துடுக்குத் தனத்தினால் இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்திக்கொள்ள தெரியாமல் சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
Also read: Vijay Tvk: விஜயை பத்தி யாருக்கும் தெரியாது!. சின்ன வயசுல இருந்தே!.. ஹைப் ஏத்தும் ஷோபா!..
ஆர்ஜே ஆனந்தியை அனுப்பிட பிக்பாஸ் முடிவு செய்ததாகவும், ஆனால் ஓரளவு கண்டெண்ட் கொடுக்கிறார் என்பதால் அவர் இந்த வாரம் தப்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.





