Connect with us
vijay

throwback stories

Vijay: ரசிகன் படத்தோட அந்தக் குளியலறைக் காட்சி… எங்கேருந்து சுட்டாங்கன்னு தெரியுமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பைரவி படத்தை இயக்கியவர் எம்.பாஸ்கர். இவரது மகன் பாலாஜி பிரபு. இவரும் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர். ஆஸ்கர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் விஜய் நடித்த ரசிகன் படத்தில் வரும் குளியலறைக் காட்சி குறித்து சுவையான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

 கடன்காரனாக்கிய நாளைய தீர்ப்பு

Also read: Biggboss Tamil: விஜய் டிவி ப்ராடக்டை தூக்கி அடித்த பிக் பாஸ் குழு… எதிர்பாராத இந்த வார எலிமினேஷன்!

நாளைய தீர்ப்பு படத்தை மகனுக்காக கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அது பிளாப் ஆனது. இதனால் ஏகப்பட்ட கடன். இந்தக் கடனை அடைக்க சாலிகிராமத்துல உள்ள வீட்டையே விற்றாராம். அதன்பிறகு விஜய் சாரை எப்படி கொண்டு வர்றதுன்னு நினைக்கும்போது விஜயகாந்தை அணுகுகிறார்.

விஜயகாந்த் – விஜய்

எனது பையனை ஹீரோவா வச்சிப் படம் எடுக்குறேன். அதுல நீங்க அவருக்கு அண்ணனா நடிச்சி இந்தப் படத்துக்கு புரொமோட் பண்ணனும்னு கேட்கிறார். பழைய நன்றிக்கடனுக்காக விஜயகாந்தும் நடிச்சிக் கொடுக்காரு. அப்படித்தான் விஜய் பிக்கப் ஆனாரு. அந்தப் படம் விஜயகாந்துக்காக வியாபாரம் நடந்து லாபம் கிடைச்சது.

 ரசிகன்

அப்புறம் தனியா விஜயை நடிக்க வைக்கணும்னு நினைச்சார் எஸ்ஏசி. அதுதான் ரசிகன். அப்போ விஜய்க்கு ஜோடியா அமராவதி படத்துல நடிச்ச சங்கவியை நடிக்க வைக்கிறாரு. கிளாமரா இருக்கும். குடும்பத்தோட பார்க்க முடியாது. காலேஜ் பாய்ஸ் விரும்பி பார்த்தாங்க. பம்பாய் சிட்டி பாட்டுலாம் சூப்பரா இருக்கும்.

Rasigan

Rasigan

குளியலறைக் காட்சி

இந்தப் படத்துல ஒரு குளியலறைக் காட்சி இருக்கும். அது ‘சாட்சி’ங்கற விஜயகாந்த் படத்துல வர்ற சீன். அதுல குளியலறைக் காட்சியில விஜி நடிச்சிருப்பாரு. அந்தப்படத்தோட இயக்குனர் எஸ்.ஏ.சி. தான். அந்தக் காட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதை அப்படியேத் தூக்கி ரசிகன் படத்துல வச்சிட்டாரு.

ஒரே டைமிங்

Also read: Delhi ganesh: 50 ஆண்டு கால நண்பர்…. டெல்லிகணேஷோட கனவே இதுதானாம்…. பிரபலம் சொன்ன தகவல்

அந்தப் படத்துலயும் படம் ஆரம்பிச்சி 30வது நிமிஷத்துல அந்த சீன் வரும். அதே மாதிரி ரசிகன் படத்திலும் அதே 30வது நிமிஷத்துல வரும். ரசிகன் சங்கவி, விஜய் கிளாமர், ஜோடிக்காக படம் நல்லா ஓடுச்சு. பாடலும் நல்லா இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in throwback stories

To Top