Delhi Ganesh: மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு மரியாதை செலுத்திய விமானப்படை!.. நெகிழ்ச்சி சம்பவம்…!

Published on: November 11, 2024
---Advertisement---

மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் உடலுக்கு விமானப்படையினர் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லி கணேஷ்: தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்து வந்தவர் டெல்லி கணேஷ். பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 81. வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரின் உயிர் பிரிந்ததாக கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: Kamalhassan: எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்?!… அஜித் ரூட்டை பின்பற்றிய கமல்ஹாசன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கே பாலச்சந்தர், விசு, கமல் போன்றவர்களின் ஆஸ்தான நடிகர். குணசித்திர கதாபாத்திரம், வில்லன், காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் ஈர்த்தவர்.

பல வேடங்களில் இவர் நடித்திருந்தாலும் அப்பா கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு மிகுந்த வரவேற்பை கொடுத்தது. டெல்லி கணேசன் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் பிரதமர் மோடி எல்லாம் தமிழிலேயே டெல்லி கணேஷ் குறித்து ட்வீட் செய்திருக்கின்றார்.

நாடகத்துறையில் இருந்த ஆழமான ஈடுபாடு காரணமாக சினிமாவில் அறிமுகமாகி தனது வயதான காலம் வரை நடித்து வந்தார் டெல்லி கணேஷ். தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் சென்று தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். ரஜினி, கமல், விஜய், சூர்யா. சிவகுமார், மணிகண்டன் என பலரும் டெல்லி கணேஷ் குறித்து தங்களது நெகிழ்வலைகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இன்று அவரது இல்லத்தில் டெல்லி கணேசுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக விமானப்படையில் வேலை பார்த்து வந்திருக்கின்றார். இதனால் விமானப்படை சார்பாக அவருக்கு தேசியக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: Vishal: சாப்பாடுதான் முக்கியமா?!.. ரோபோ சங்கரை பளாரென அறைந்த விஷால்!.. ஷாக்கிங் நியூஸ்!..

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த பலரும் மறைந்தாலும் உலகம் உன் பெயர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்றபடி வாழ்ந்து சென்று இருக்கின்றார் நடிகர் டெல்லி கணேஷ் என்று உருக்கமாக பதிவிட்டு வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.