Delhi Ganesh: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் மறைவு இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிவக்குமார், மணிகண்டன் என தமிழ் திரையுலகினர் டெல்லி கணேஷ் குறித்த நெகிழ்வலைகளை பகிர்ந்து வருகின்றனர்.
பல்வேறு வேடங்கள் ஏற்று நடித்திருந்தாலும் அப்பா கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. நடுத்தர குடும்பத்தினரை கண்முன்னே கொண்டு நடித்தவர். டெல்லி கணேஷின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அதுவும் தமிழிலேயே டெல்லி கணேஷ் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: Vishal: சாப்பாடுதான் முக்கியமா?!.. ரோபோ சங்கரை பளாரென அறைந்த விஷால்!.. ஷாக்கிங் நியூஸ்!..
புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நடிப்பில் அவர் அபாரமான திறமை கொண்டவர். ஏற்றுக்கொண்ட பாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்திய விதத்திற்காகவும் தலைமுறை கடந்து ரசிகர்களைக் கவர்ந்த திறமைக்காகவும் அவர் என்றென்றும் அன்போடு நினைவுகூரப்படுவார். நாடகத் துறையிலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

இதுபற்றி டெல்லி கணேஷின் மகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ”அப்பா இறந்ததை நினைத்து கவலைப்படுவதா? இல்லை பிரதமர் வரை அப்பாவிற்கு இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். அவரின் புகழ் அந்தளவு பரவியிருக்கிறது. என்பதை நினைத்து சந்தோஷப்படுவதா என்பது தெரியவில்லை,” என்று உண்மையான வருத்தத்துடன் கூறினார்.
ஒரு கலைஞனின் புகழ் அவர் இறந்த பின்னர் தான் இந்த உலகிற்கு தெரியவரும். இது உண்மை என்பதற்கு சான்றாக டெல்லி கணேஷின் இறப்பு அமைந்துள்ளது. அவருடன் நடித்த அனைவருமே டெல்லி கணேஷ் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Kamalhassan: எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்?!… அஜித் ரூட்டை பின்பற்றிய கமல்ஹாசன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
