Ramyapandian: திருமணம் முடிந்த கையோட ஹனிமூன்!… கணவருடன் ரம்யா பாண்டியன் எங்க போயிருக்காங்க தெரியுமா?!..

Published on: November 11, 2024
---Advertisement---

திருமணம் முடிந்த கையுடன் நடிகை ரம்யா பாண்டியன் தனது காதல் கணவருடன் ஹனிமூன் சென்று இருக்கின்றார்.

ரம்யா பாண்டியன்: தமிழ் சினிமாவில் படங்களின் மூலம் பிரபலமானதை காட்டிலும் மொட்டை மாடி போட்டோ சூட் மூலமாக பிரபலமானவர் ரம்யா பாண்டியன். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து ஜோக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

டிவி நிகழ்ச்சிகள்: தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தாலும் பெரிய அளவுக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பக்கம் ஒதுங்கிய ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பரிச்சயமானார். அதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: சொதப்பிய விஜய் சேதுபதி!.. அடங்காத போட்டியாளர்கள்.. ‘கமலை கொண்டு வாங்க பாஸ்’..

பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரம்யா பாண்டியனை மக்களிடையே மேலும் பிரபலமாக்கியது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் அனைத்துமே ரசிக்கும்படியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் கடைசியாக நண்பகல் நேரத்தில் மயக்கம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

காதலர் லோவல் தவான்: தற்போது இடும்பன் காரி என்கின்ற திரைப்படத்திலும், முகிலன் என்கின்ற வெப் சீரியஸிலும் நடித்து வருகின்றார். சினிமாவில் படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரம்யா பாண்டியன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதலரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்திருந்தார். அவரின் பெயர் லோவல் தவான்.

ரிஷிகேஷில் திருமணம்: யோகா மாஸ்டரான இவரை நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா காலகட்டத்தில் இருந்து காதலித்து வந்திருக்கின்றார். இருவரும் கோவில் கோவிலாக சென்று தங்களது காதல்களை வளர்த்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரிஷிகேஷில் கங்கை நதியோரம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: Surya-Karthi: தம்பிக்காக சூர்யா செய்த விஷயம்.. மீண்டும் அண்ணனுக்காக அதையே செய்த கார்த்தி… கங்குவா சீக்ரெட்

இந்த திருமணத்திற்கு நடிகர் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், அசோக்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

ஹனிமூன்: இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நடிகை ரம்யா பாண்டியன் ஹனிமூனுக்கும் சென்றிருக்கின்றார். அங்கு தனது காதல் கணவர் லோவல் தவானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். மேலும் பின்னணியில் ‘புது வெள்ளை மழை’ என்கின்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதை வைத்து பார்க்கும் போது நடிகை ரம்யா பாண்டியன் காஷ்மீருக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றார் என்ற பலரும் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.